11 Jun 2021

தோரன்காடு காட்டில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு-4000 லீற்றர் கசிப்பு 6000லீற்றா கோடா கைப்பற்றல் மூவர் கைது.

SHARE

தோரன்காடு காட்டில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு-4000 லீற்றர் கசிப்பு 6000லீற்றா கோடா கைப்பற்றல் மூவர் கைது.

அடர்ந்த காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4000 லீற்றர் கசிப்பு மற்றும் 6000 லீற்றர் கோடா என்வற்றுடன் மூவர் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று  வெள்ளிக்கிழமை அதிகாலை (10) திருகோணமலை தோரன்காடு அடர்ந்த காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி ஜே.எஸ்.பி.அத்தநாயக்க தெரிவித்தார்.

மிகவும் சூட்சுமமான முறையில் சட்டவிரோதமான நடாத்தப்பட்டு வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை மதுவரி திணக்கள் பொறுப்பதிகாரி அத்தநாயக்க உதவி பொறுப்பதிகாரி எஸ்.காண்டீபன் ஆகியோர் தலைமையிலான அதுவரி திணைக்கள அதிகாரிகள் மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் பணிப்புரையின் போரில் கிழக்கு மாகாண மதுவரி அத்தியட்சகர் கே.தர்மசீலனின் வழிகாட்டலில்   வெள்ளிக்கிழமை அதிகாலை சுற்றிவளைத்தபோதே மூவர் கைது செய்து செய்ப்பட்டதுடன் பெருமளவு கோடா மற்றும் கசிப்பு உட்பட பெருமளளவு கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யபபட்ட நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக மதுவரி திணைக்கள் உதவி பொறுப்பதிகாரி எஸ்.காண்டீபன் தெரிவித்தார்.






 

SHARE

Author: verified_user

0 Comments: