13 Apr 2021

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வண்டிகளும் நினைவு சின்னங்களும் வழங்கி வைப்பு.

SHARE

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வண்டிகளும் நினைவு சின்னங்களும் வழங்கி வைப்பு.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் நினைவு சின்னங்களும் வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை(10) இடம்பெற்றது.

கடந்த 2014 – 2020 வரையில் இப்பாடசாலையில் புலமைப் பரிதோற்றி வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும், வெட்டுப் புள்ளிக்கு குறைவான புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நாடாளுமனற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் கோறளை பற்று பிரதேசசபை தவிசாளர், வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







SHARE

Author: verified_user

0 Comments: