15 Mar 2021

கத்தோலிக்க பெண்ணின் உடலும் ஓட்டமாவடியில் நல்லடக்கம்.

SHARE


கத்தோலிக்க பெண்ணின் உடலும் ஓட்டமாவடியில் நல்லடக்கம்.

ஓட்டமாவடி சூடுபத்தினசேனை நல்லடக்கப் பிரதேசத்தில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தவிர்த்து முதன் முறையாக கத்தோலிக்கப் பெண் ஒரவரின் சடலமும் சனிக்கிழமை 13.02.2021  நல்லடக்கம் செய்யப்பட்டதாக மட்டக்களப்பு  நாடாளுமன்ற உறுப்பினர் நஸிர் அஹமட் தெரிவித்தார்இதுநாட்டின் இன ஐக்கியத்திற்கும் மனிதாபிமானம் மரணித்து விடவில்லை என்பதற்கும் சிறந்தசான்றாக அமைந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எந்தமதத்தவராக இருந்தாலும் விருப்பத்திற்கு மாறாக எரிக்கப்படும் சடலங்கள் நல்லடக்கம்செய்யப்படவேண்டும் என்பதில் உறுதியாகவிருந்து ஓயாது நடவடிக்கை மேற்கொண்டவன் என்ற ரீதியிலே சனிக்கிழமை கத்தோலிக்கப் பெண்ணின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டவிடயத்தை நல்லிணக்கத்தை விரும்புவோருக்கான ஒரு வெற்றி என்று தான் உணர்வதாக அவர்தெரிவித்தார்.

ஜா-எலையைச்சேர்ந்த 60 வயதான அந்தப் பெண்மணி கொரோனா வைரஸ் தொற்றுக்கள்ளாகிய நிலையில் ஹோமாகமவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்து சிகிச்சை பயனின்றி மார்ச்  08ஆம் திகதி மரணமடைந்தார். அவரின்உடல் சனிக்கிழமை 13.02.2021 ஓட்டமாவடியில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டு வரும் சூடுபத்தினசேனை பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் வைக்கப்பட்டிருந்த 45 கொரோனா பூதவுடல்கள் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி,கொவிட் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் காணப்பட்ட பிரச்சினைகள் முழுவதுமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஓரிரண்டு சடலங்கள் உள்ளதாகவும் அவை விரைவில் அடக்கம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஓட்டமாவடிசூடுபத்தினசேனையில் மார்ச் 05ஆம் திகதி  09 சடலங்கள்06ஆம் திகதி  11 சடலங்கள்  07ஆம் திகதி  04 சடலங்கள்   08 ஆம் திகதி 07 சடலங்கள் 09 ஆம் திகதி 07சடலங்கள்  10ஆம் திகதி 01 சடலம் 13ஆம்திகதி 05 சடலங்கள் எனும் அடிப்படையில் மொத்தமாக 45 சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

 

SHARE

Author: verified_user

0 Comments: