10 Jan 2021

தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடியில் கொட்டும் மழையிலும் வீதிகள் தோறும் நடமாடும் வாகனத்தின் மூலம் அண்டிஜன் பரிசோதனைகள்

SHARE

தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடியில் கொட்டும் மழையிலும்  வீதிகள் தோறும் நடமாடும் வாகனத்தின் மூலம் அண்டிஜன் பரிசோதனைகள் 82 பேரில்  2 பேருக்கு தொற்று உறுதி.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு காத்தான்குடியில் கொட்டும் மழையிலும் ஞாயிற்றுக்கிழமை (10) வீதிகள் தோறும் நடமாடும் வாகனத்தின் மூலம் அண்டிஜன் பரிசோதனைகள் இடம் பெற்று வருகின்றன.

காத்தான்குடி நகர சபை பிரிவில் நான்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பிரிவுகளிலும் இந்த நடமாடும் அண்;டிஜன் பரிசோதனைகள் இடம் பெற்று வருகின்றன.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் .எல்.எம்.நபீல் தலைமையில் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆசாத் ஹசனின் மேற்பார்வையில் இந்த அண்டிஜன் பரிசோதனைகள் இடம் பெற்று வருகின்றன.

பொலிசாரின் பாதுகாப்புடன் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.புலேந்திரகுமார் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார அதிகாரிகள் அண்டிஜன் பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

பொது மக்கள் இதற்கான பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும் ஆர்வத்துடன் அண்டிஜன் பரிசோதனைக்கு சமூகம் கொடுப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

82பேரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.








SHARE

Author: verified_user

0 Comments: