28 Jan 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலானவர்கள் ஏழை மக்கள் வீடற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வீடும் வீட்டுத் தளவாடங்களும் வழங்கி வைக்கும் நிகழ்வில் மாவட்டச் செயலாளர் கருணாகரன்.

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலானவர்கள் ஏழை மக்கள் வீடற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வீடும் வீட்டுத் தளவாடங்களும் வழங்கி வைக்கும் நிகழ்வில் மாவட்டச் செயலாளர் கருணாகரன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள் ஏழை மக்களாகும் என மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

லண்டன் ஹரோ ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினால் மாற்றுத் திறனாளிகளுக்காக நிருமாணிக்கப்பட்ட வீடுகளையும் வீட்டுக்கான தளவாடங்களையும் வீட்டுபயோகப் பொருட்களையும் அதன் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

லண்டன் ஹரோ ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின சமூக நலப் பணிக்கான இணைப்பாளர் கே. துரைராஜா தலைமையில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் காயான்குடா கிராமத்தில் இந்நிகழ்வு வியாழக்கிழமை 28.01.2021 இடம்பெற்றது.

இங்கு பயனாளிகளிடம் வீடுகளையும் வீட்டுக்கான தளவாடங்களையும் வீட்டுபயோகப் பொருட்களையும் கையளித்த பின்னர் அதிகாரிகள் பயனாளிகள் கிராம மக்கள் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சமூக நலப் பணியாளர்கள் முன்னிலையில் அவர் உரையாற்றினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் ஏழை மக்களுக்கான முன்னேற்ற வழியை யார் காட்டுகின்றார்கள் எங்களது சமுதாயம் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சமுதாயத்திலுள்ள அத்தனை பேரும்  சிந்திக்க வேண்டும்.

நான் பல கிராமங்களுக்கும் செல்கின்றபொழுது அங்கு மக்கள் மனதிலே பல மாற்றங்கள் உணரப்படுவதை அவதானித்திருக்கின்றேன்

சில இடங்களில் பலர் தாங்களாகவே முன்னேற்றப்பாதைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். மீன்பிடி விவசாயம் கால்நடை வளர்ப்பு போன்ற பல பொருளாதார முன்னேற்றங்களிலே குறிப்பாக பெண்கள் ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது.

சில அநாமதேய வாந்திகளுக்குப் பின்னால் சென்று எமது எதிர்கால சந்ததிகளான இன்றைய இளந் தலைமுறையினரின் வாழ்வை நாம் சீரழித்து விடக் கூடாது. கல்விதான் நமது உயர்ந்த இலக்கை அடையக் கூடிய பெரியதொரு வளம். இதனை நாம் மறந்து செயற்பட்டுவிடக் கூடாது.” என்றார்.

காயான்குடாக் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளான 4 பயனாளிக் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வீடும் வீட்டுத் தளவாடப் பொருட்களும் வீட்டுபயோகப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டதாக லண்டன் ஹரோ ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின சமூக நலப் பணிக்கான இணைப்பாளர் கே.துரைராஜா தெரிவித்தார்.

இந்நிகழ்வில் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி இளையதம்பி ஸ்ரீநாத் ஏறாவூர் பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி .எஸ்.பி. பெரேரா தகவல் திணைக்களத்தின் மாவட்ட தகவல் பிரிவு அதிகாரி வடிவேல் ஜீவானந்தம் கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ‪; விரிவுரையாளர் கலாநிதி எஸ். உமாசங்கர் சக்தி இல்லம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்திமன்ற இணைப்பாளர் எஸ். ஜீவமணி ஆகியோரும் பங்கு பற்றினர்.

 
















SHARE

Author: verified_user

0 Comments: