26 Jan 2021

மட்டக்களப்பில் காலநிலை மாற்றத்திற்கு சீரமைவான விவசாய நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்திற்கு 200 பெண்கள் தெரிவு.

SHARE

மட்டக்களப்பில் காலநிலை மாற்றத்திற்கு சீரமைவான விவசாய நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்திற்கு 200 பெண்கள் தெரிவு.

மட்டக்களப்பில் காலநிலை மாற்றத்திற்கு சீரமைவான விவசாய நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்திற்கு 200 பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு விவசாயப் பிரதிப் பணிப்பாளர் வி. பேரின்பராசா தெரிவித்தார்.

வந்தாறுமூலை விவசாய விரிவாக்கல் உதவிப் பணிப்பாளர் அலுவலகத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாய முயற்சியாளர்களான பெண் பயனாளிகளுக்கு விவசாய உபகரணத் தொகுதிகள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை 25.01.2021 இடம்பெற்றது.

மட்டக்களப்பு வடக்கு வலய விவசாய உதவிப் பணிப்பாளர் எஸ். சித்திரவேல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சித்தாண்டி வநடதாறுமூலை ஆகிய வலயங்களின் பெண்கள் விவசாய அமைப்பைச் சேர்ந்த 40  விவசாயப் பெண்களுக்க தலா 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான விவசாய உபகரணங்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் விவசாயத்தில் ஈடுபடும் பெண் விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய விவசாயப் பிரதிப் பணிப்பாளர் பேரின்பராசா விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தினூடாக இந்த பெண் விவசாயிகளான நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள்.

காலநிலை அடிக்கடி மாற்றம் அடைந்து கொண்டிருக்கின்றது. மாற்றமடைந்து செல்லும் காலநிலைக்கு இசைவாக நாமும் நமது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.

இதனூடாக எமக்குத் தேவையான போசாக்கான உணவுகள் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

அதன் காரணமாகத்தான் வீட்டுத் தோட்டச் செய்கையில் பெண்களை ஊக்குவிக்கும் வகையிலும் பெண்களுக்கிடையில் சிறந்த விவசாயிகளை உருவாக்கும் வகையிலும் இவ்வாறான உபகரணங்கள் பெருந்தொகை பணச் செலவில் முற்றிலும் இலவசமாக வழங்கப்பபடுகின்றன.

அதேவேளை இவ்வாறு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இத்தகைய விவசாய உபகரணத் தொகுதிகளையும் உங்களுக்கு வழங்கப்படும் விவசாயப் பயிற்சிகளையும் நீங்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி சிறந்த விவசாய உற்பத்திகளை மேற்கொண்டு முன்னேற்றமடைய வேண்டும் என்பதுதான் விவசாயத் திணைக்களத்தின் நோக்கம்என்றார்.

நிகழ்வில் காலநிலை மாற்றத்திற்கு சீரமைவான விவசாய நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் ஆர்.எம். ஆரியதாஸ விவசாயப் பேதனாசிரியர்களான தெய்வமனோஹரி ரமேசன் பி. ரவிவர்மன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர் . ரவிராஜ் உட்பட விவசாயப் பெண்களும் கலந்து கொண்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: