17 Jan 2021

எம்.ஜி.இராமசந்திரன் அவர்களின் 104 ஆவது பிறந்த தின நிகழ்வு.

SHARE

எம்.ஜி.இராமசந்திரன் அவர்களின் 104 ஆவது பிறந்த தின நிகழ்வு.

இந்தியாவின் பிரபல அரசியல்வாதியும், சிறந்த நடிகரும், முன்னாள் தமிழக முதல்வருமான மக்கள் திலகம் அமரர் எம்.ஜி.இராமசந்திரன்  அவர்களின் 104 ஆவது பிறந்த தின நிகழ்வும்  மட்டக்களப்பு மாவட்டம் கரவெட்டி எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் நான்காவது ஆண்டு நிறைவு விழாவும் ஞாயிற்றுக்கிழமை (17) பி. 3.00 மணியளவில் கரவெட்டி எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் தலைவர் வீ.கெங்காதரம் தலைமையில் வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரவெட்டி பலநோக்கு கட்டட வளாகத்தில் இடம்பெற்றது.

இதன் போது மங்கள விளக்கேற்றப்பட்டதனைத் தொடர்ந்து எம்.ஜீ.ஆர் இன் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து  எம்.ஜி.ஆர் போன்று வேடம் தரித்திருந்த நற்பணி மன்றத்தின் தலைவர் வீ.கெங்காதரம் அவர்களினால் எம்.ஜீ.ஆர் இன் 104 ஆவது பிறந்த தினத்தினை குறிக்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

நிகழ்வின்போது மன்றத்தின் தலைவரிற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், எம்.ஜீ.ஆர் தொடர்பான உரைகளும் இடம்பெற்றன.

குறித்த நற்பணி மன்றத்தினால் வருடாந்தம் எம்.ஜீ.ஆரின் நினைவாக வறிய மக்களின் நலனை கருத்திற் கொண்டு பல்வேறுபட்ட உதவிகள் வழங்கி வருவது வழமையாக இருந்து வருவதுடன், இம்முறை 50 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார முறைப்படி இடம் பெற்ற குறித்த நிகழ்வில் எம்.ஜீ.ஆர் நற்பணி  மன்றத்தின்  ஸ்தாபகத் தலைவர் உள்ளிட்ட நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள், ஊர்ப் பிரமுகர்கள், ஆலய நிருவாக சபையினர் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.















SHARE

Author: verified_user

0 Comments: