9 Dec 2020

புரவி சூறாவளி அச்சம் நீங்கியதையடுத்து வாவி மீன்பிடித் தொழில் வழமை நிலைக்கு.

SHARE

புரவி சூறாவளி அச்சம் நீங்கியதையடுத்து வாவி மீன்பிடித் தொழில் வழமை நிலைக்கு.

புரவி சூறாவளி அச்சம்மற்றும் கடும் காற்று மழையுடன் கூடிய காலநிலை நீங்கியதையடுத்து மட்டக்களப்பு  மாவட்டத்தில் கரையோர வாவி மீன்பிடி வழமை நிலைக்குத் திரும்பியுள்ளன.

மட்டக்களப்பு வாவி மீன்பிடியாளர்கள் சீரற்ற காலநிலை காரணமாக மீன்பிடித் தொழிலுக்குச் செலவதைத் தவிர்த்து வந்த நிலையில் தற்போது மழை குறைவடைந்து வெயிலுடன் கூடிய காலநிலை காணப்படுவதால் மண்முனை பாலம் கல்லடி காத்தான்குடி உட்பட பல இடங்களில் கரையோர வாவி மீன்பிடியாளர்கள் வழமையான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இம்மாவட்டத்தில் சுமார் 13000 குடும்பங்கள் வாவி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்தாக மாவட்ட கமற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் தெரிவித்துள்ளது.









SHARE

Author: verified_user

0 Comments: