22 Dec 2020

கிழக்கு வடமத்திய மற்றும் வடமேற்கு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது – ரமேஸ்.

SHARE

கிழக்கு வடமத்திய மற்றும் வடமேற்கு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது – ரமேஸ்.

கிழக்கு வடமத்திய மற்றும் வடமேற்கு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது நாட்டின் சில பிரதேசங்களில் முக்கியமாக கிழக்கு மற்றும் ஊவா மாவட்டத்திலும் பொலன்நறுவை மாத்தளை நுவரெலியா மாவட்டத்திலும் 100 மில்லி மீட்டருக்கு அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. என  மட்டக்களப்பு வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்தார். 

அவரது காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

இச்சந்தர்ப்பத்தில் காற்றின் போதுமானது மணிக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் நாட்டில் சில பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் மின்னல் தாக்கங்களிலிருந்து ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள கடல் பிராந்தியத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை செய்வதுடன் சில கணங்களில் கனத்த மழை பெய்யக்கூடும் கடல் பிராந்தியத்தில் காத்திரமானது 30 தொடக்கம் 40 கிலோமீட்டர் வரை வேகத்தில் வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடிய மட்டக்களப்பு பொத்துவில் வரையான காலத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பில் 150 மில்லி மீற்றர் மழை பதிவாகி உள்ளது மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரையான கடற் பிராந்தியங்களில் கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்கள் அவதானமாக செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அவர் தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: