18 Dec 2020

வரலாற்று தொன்மை மிகு புணாணை ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் தம்பமண்டப வேலைகளை மேற்கொள்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.

SHARE

வரலாற்று தொன்மை மிகு புணாணை ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் தம்பமண்டப வேலைகளை மேற்கொள்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.

பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு  மாவட்டத்தின் எல்லையில் கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள ஜெயந்தியாய - புணாணை கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் தம்பமண்டப வேலைகளை மேற்கொள்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  கடந்த செவ்வாய்கிழமை (15) சுபவேளையில் நடைபெற்றது. 

இம்மண்டப வேலைகள் ஆலய புணரமைப்பிற்காக இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன. 

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ள தமிழர்களின் அடையாளமான இவ்ஆலயத்தை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரதும் தலையாய கடமையாகும்.  இவ் ஆலய வளர்ச்சிக்காக நிதி உதவிகளை  ஆலயத்தின் உத்தியோகபூர்வ வங்கி கணக்கிலக்கமான 340-2-001-1-0030131 எனும்  மக்கள் வங்கி கணக்கிலக்கத்திற்கு வைப்பிலிடமுடியும். பொருளுதவிகளை எதிர்பார்ப்பதாக ஆலய பொருளாளர் ச.வசந்தகுமார் தெரிவித்தார்.






























SHARE

Author: verified_user

0 Comments: