10 Dec 2020

சைபர் குற்றங்கள் எனும் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளோடும் பெண்கள் போராட வேண்டியுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வில் சட்ட ஆலோசகர் மயூரி ஜனன்

SHARE

சைபர் குற்றங்கள் எனும் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளோடும் பெண்கள் போராட வேண்டியுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வில் சட்ட ஆலோசகர் மயூரி ஜனன்.

சைபர் குற்றங்கள் எனும் இணைய வழியூ;டாக நடைபெறுகின்ற கண்ணுக்குத் தெரியாத எதிரிகளோடும் சமகாலப் பெண்கள் போராட வேண்டியுள்ளதாக அகம் மனிதாபிமான வள நிலையத்தின் சட்ட ஆலோசகரும் அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளருமான சட்டரணி மயூரி ஜனன் தெரிவித்தார்.

“மீள்வோம் சிறப்புடன்- மனித உரிமைகளுக்காக தோள் கொடுப்போம்” “Recover Better – Stand Up for Human Rights”    எனும் ஐக்கிய நாடுகள்  சபையின் 2020ம் ஆண்டுக்கான சர்வதேச மனித உரிமை தினத்தின் கருப் பொருளை மையமாகக் கொண்ட  சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு அகம் மனிதாபிமான வள நிலையத்தின்  ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு தன்னாமுனை மியானி கேட்போர் அரங்கில் வியாழக்கிழமை 10.12..2020 இடம்பெற்றது.

நேரடி மற்றும் ஸ{ம் தொழினுட்பத்தினூடான இந்நிகழ்வில் வளவாளர்களாக அகம் மனிதாபிமான வள நிலையத்தின் சட்ட ஆலோசகரும், மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பளருமாகிய சட்டத்தரணி மயூரி ஜனன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அகம் மனிதாபிமான வள நிலையத்தின் பணிப்பாளர் கே. லவகுசராசா தலைமையில்  சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நேரடியாகவும் ஸ{ம் தொழினுட்பத்தினூடாகவும் இந்த செயலமர்வு இடம்பெற்றது.

“சர்வதேச மனித உரிமை  நாள்” நிகழ்வில் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் மற்றும் பெண்கள் உரிமையும் பாதுகாப்புச் சட்டங்கள் போன்ற தலைப்புக்களில் கலந்துரையாடப்பட்டது.

இதில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் களப் பணியாளர்கள் சமூக ஊடக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 90 இற்கு மேற்பட்ட சமூக ஊடக வலைப்பதிவர்களும் இந்த செயலமர்வில் ஸ{ம் தொழினுட்பத்தினூடாக இணைந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் கருத்துத் தெரிவித்த வளவாளர் சட்ட ஆலோசகர் மயூரி இணைய வழியூடான சைபர் குற்றங்கள் தற்போது வியாபித்துள்ளன. அத்துடன் இது சமகாலத்திலே தொழினுட்ப முன்னேற்றத்தின் பாதக அம்சங்களில் ஒன்றாக வளர்ச்சியடைந்து வலுப்பெற்றுச் செல்கின்றது.

இந்த சைபர் குற்றங்கள் மூலமாக குறிப்பாக பெண்கள் மிகவும் மேசமாகவும் தொடர்ச்சியாகவும் பாதிக்கப்பட்டுக் கொண்டு வருகின்ற நிலைமையைக் காண்கின்றோம்.

இதன் காரணமாக பலபோது மன உளைச்சலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளான நிலையில் தற்கொலைகள் கூட இடம்பெற்றிருக்கின்றன.

இதனுடன் சேர்ந்தவாறு பெண்கள் வரலாறு நெடுகிலும்  இருந்து வருகின்ற இல்லத்து வன்முறைகள் பாலியல் வன்முறைகள் பால்நிலை சார்ந்த வன்முறைகள் என்பனவற்றையும் எதிர்கொள்கின்றார்கள்.

ஆகவே சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டித்துக் கொண்டிருக்கும் இத்தறுவாயில் நாம் மனித உரிமைகளை மதிக்கும் கடப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்” என்றார்.

இந்நிகழ்வில் சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் கே. முத்துலிங்கம்  அகம் மனிதாபிமான வள நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ. மதன் அருவி பெண்கள் வலையமைப்பின் திட்ட உதவி இணைப்பாளர் எஸ். தர்ஷினி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.










SHARE

Author: verified_user

0 Comments: