28 Dec 2020

எவோட்ஸ் 2021 கலை கலாசாரப்போட்டி.

SHARE


 (.எச்..ஹுஸைன்)

எவோட்ஸ் 2021 கலை கலாசாரப்போட்டி.
கடந்த 40 ஆண்டுகளாக இயங்கிவரும்  புதிய அலை கலை வட்டம், சென்ற 1995ஆம் ஆண்டு முதல் எவோட்ஸ் கலை, கலாசாரபோட்டிகளை நடத்திவருகின்றது.

அவ்வகையில் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு முதல் இந்தப் போட்டிகளை மாதாந்தம்   நடத்தவுள்ளது.

போட்டிகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களுக்கூடாக நடத்தப்படவுள்ளனஅதன் முதற் கட்டமாகத் திறந்த கவிதைப்போட்டி ஜனவரி மாதத்துக்கான போட்டியாக நடத்தப்படவுள்ளது.

போட்டிகளுக்கான நிபந்தனைகள்

1) உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதைகளை   அனுப்பலாம்.

2) கவிதைகள் மரபுக்கவிதையாகவோ. புதுக்கவிதைகளாக   இருக்கலாம்.

3)  கவிதைகள் 12 வரிகளுக்கு குறையாமலும் 24 வரிகளுக்கு மேம்படாமலும் இருத்தல் வேண்டும்.

4)  அனுப்பப்படும் கவிதைகளில் சொந்தப் பெயர், புனைப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கங்கள் போன்ற விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்

5)   கவிதைகள் யாவும் எதிர்வரும் 18.01.2021க்குள் எமக்கு கிடைக்ககூடியதாக பதிவிட வேண்டும்

6)   பதிவிடும் எமது வலைத்தளங்களின் விபரங்கள் வருமாறு முகப்புத்தகம் வாயிலாக

https://www.facebook.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88-125209969320716

என்ற பக்கத்தின் மூலமாகவும் puthiya alaiஎன்ற வட்சப் குறுப் மூலமாகவும் மற்றும் puthiyaalaikalaivaddam1980@gmail.com என்ற ஈமெயில் முகவரியூடாகவும் அனுப்பி வைக்க முடியும்.

7)   வயதெல்லை 15வயது முதல் 35வயது வரை

8)   நடுவர்களின் முடிவே இறுதியானது.

இந்த போட்டிகளுக்கான பரிசளிப்புகள் அந்தந்த மாத இறுதியில் நடைபெறும்முதல் கவிதைப் போட்டிக்கான பரிசளிப்பு 30.01.2021இல் நடைபெறும்.

பரிசுகளுக்காக மூன்று ஆக்கங்கள் மட்டுமே தெரிவு செய்யப்படும் அவற்றுக்கான பரிசுகளின் விபரம் வருமாறு

முதல்பரிசு     :- 5000 ரூபா பணப்பரிசும் சான்றிதழும்.

இரண்;டாம் பரிசு :- 3000 ரூபா பணப்பரிசும் சான்றிதழும்

மூன்றாம் பரிசு  :- 2000 ரூபா பணப்பரிசும் சான்றிதழும்

மேலதிக விபரங்களுக்கு 0777412604. 0776274099. 076 2002701 என்ற அலை பேசி இலக்கங்களுடன் தொடர்பு    கொள்ளவும்.

SHARE

Author: verified_user

0 Comments: