17 Dec 2020

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் 16 ஆவது இலக்கிய விழா மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

SHARE

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் 16 ஆவது இலக்கிய விழா மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய மண்முனைப்பற்று பிரதேச இலக்கிய விழா 2020 இன்று 17.12.2020 வியாழக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

பிதேச செயலக கலாசாரப் பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், பிரதேச செயலக கணக்காளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், கிராம உத்தியோத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட கலாசார அதிகாரசபையின் உறுப்பினர்களும் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் இலக்கிய விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட பிரதேச இலக்கியப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புதிய மழை தூறல் - 4 நூலானது பிரதேச செயலாளரினால் வெளியிட்டுவைக்கப்பட்டதுடன், நூலின் முதற் பிரதிகள் அதிகள் மற்றும் கலைஞர்களுக்கு பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்ச்சியாக 16  வருடங்களாக இடம்பெற்றுவரும் இலக்கிய விழாவில் இவ்வாண்டிற்கான  இலக்கிய துறைக்கான கெளரவம் கலாபூசனம் ஆ.தங்கராசா அவர்களுக்கு அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது. 

சுகாதார முறைப்படி இடம்பெற்ற நிகழ்வினை மாணவர்களின் கலைப்படைப்புக்கள் அலங்கரித்திருந்ததுடன், நிகழ்வில் கலந்து கொண்டு தமிழ் மொழி வாழ்த்துப்பாவினை பாடிய மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



































SHARE

Author: verified_user

0 Comments: