29 Nov 2020

அரச உத்தியோகத்தர்களைத் தவிர மற்ற சுய தொழில் புரியும் அனைவரும் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டிருகின்றார்கள். - கிரான் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு

SHARE

உத்தியோகத்தர்களைத் தவிர மற்ற சுய தொழில் புரியும் அனைவரும் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டிருகின்றார்கள். - கிரான் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு.

தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று  நெருக்கடியில் அரச உத்தியோகத்தர்களைத் தவிர மற்ற சுய தொழில் புரியும் அனைவரும் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டிருப்பதாக கோறளைப்பற்று தெற்குகிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தெரிவித்தார்.

அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று  நெருக்கடியில்  பாதிக்கப்பட்ட நலிவடைந்தோருக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

அகம் மனிதாபிமான வள நிலையத்தின்  மூன்றாம்  கட்ட உதவி வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 29.11.2020 கிரான் பிரதேச செயலக வளாகத்தில் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் அழகுராசன் மதன்  தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர் ராஜ்பாபு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வறுமைக்குட்பட்ட மக்கள் அநேகம் பேர் வாழ்கிறார்கள் என்ற காரணத்தினால் இந்த மனிதாபிமான உதவிகள் அவர்களுக்குப் பெருந்துணை புரியும்.

அதிலும் தகுதியானவர்களுக்கு உதவிகள் சென்று சேர வெண்டும் என்பதில் நாம் அதிக அக்கறையுடனிருக்கின்றோம்.” என்றார்.

பிரதேச செயலக உளவளத் துணையாளர் எஸ். விக்னேஸ்வரியின் இணைப்பாக்கத்தில் இடம்பெற்ற இந்நிகழ்;வில்  இந்நிகழ்வில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கர்ப்;பிணித் தாய்மார் 45 பேருக்கு சத்துணவுப் பொதிகளும், பெண்கள் வளரிளம் பெண் பிள்ளைகள் ஆகியோரடங்கிய 45 குடும்பங்களுக்கு சுகாதாரப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.‪

கிரான் பிரதேச உதவிச் செயலாளர் வை. யோகராஜா கணக்காளர் ஏ. மோகன்ராஜ் நிருவாக உத்தியோகத்தர் ஏ. ரவிச்சந்திரன் சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ். ஜெயசேகர் சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனை அலுவலர் எம்.எஸ். ஸப்றி ஹஸன்  அகம் மனிதாபிமான வள நிலையத்தின் மாவட்ட அலுவலர்களான ஏ. மகாதேவன், ரீ. அரவிந்தன், அருவி பெண்கள் வலையமைப்பின் திட்ட இணைப்பாளர் எஸ். தர்ஷினி வெளிக்கள உத்தியோகத்தர் என். லுனிற்றா ஆகியோரும் கலந்து கொண்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: