12 Nov 2020

பொலிஸாரின் பாவனைக்கு கொரோனா வைரஸ் சுகாதார பொருட்களும் தொற்றொதுக்கலுக்குள்ளான குடும்பங்களுகச்கு உலருணவுப் பொதிகளும் விநியோகம்.

SHARE


பொலிஸாரின் பாவனைக்கு கொரோனா வைரஸ் சுகாதார பொருட்களும் தொற்றொதுக்கலுக்குள்ளான குடும்பங்களுகச்கு உலருணவுப் பொதிகளும் விநியோகம்.

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களோடு பணியாற்றும் பொலிஸாரையும் பாதுகாக்கும் விதமாக பொலிஸாருக்கு சுகாதார பாதுகாப்புப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலைரயமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தெரிவித்தார்.

அதேவேளை பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் உள்ள கொரோனா வைரஸ் தொற்றொதுக்கலுக்குள்ளான குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காக உலருணவுப் பொருட்களும் ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மயூரி ஜனன் மேலும் தெரிவித்தார்.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை 12.11.2020 இந்த உதவிப் பொருட்கள் கையளிப்பு இடம்பெற்றது.

ஏறாவூர் பொலிஸாரின் வழிகாட்டுதலின்  பேரில் கொரோனா வைரஸ் தொற்றொதுக்கலுக்குட்பட்டுள்ள குடும்பங்களுக்;கான உலருணவு விநியோகத்தின்போது ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.கே. ஜயந்த பொலிஸ் கொரோனா வைரஸ் தடுப்பு செயலணியும் இணைந்து கொண்டது.

நிவாரண விநியோகப் பணிகளிலும் சுகாதார பாதுகாப்புப் பொருட்கள் வழங்குவதிலும் அருவி பெண்கள் வலையமைப்பின் உதவி இணைப்பாளர் எஸ். தர்ஷினி வெளிக்கள உத்தியோகத்தர் என். லுனிற்றா நிருவாக அலுவலர் எஸ். ரம்யா ஆகியோர் ஈடுபட்டனர்.












SHARE

Author: verified_user

0 Comments: