14 Nov 2020

சேர்ந்து காப்போம் கிழக்கு எனும் தொனிப்பொருளில் மரநடுகை.

SHARE

சேர்ந்து காப்போம் கிழக்கு  எனும் தொனிப்பொருளில் மரநடுகை.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின்  “சேர்ந்து காப்போம் கிழக்கு”  எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாணம்  பல வேலைத் திட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டவரும் நிலையில்  வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் மரநடுகை திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட 4வது கெமுனு படைப்பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி ஜயந்த ஜயசிங்கே தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண 231 வது பிறிகேட்  இராணுவ கட்டளை தளபதி  கேணல் எஸ்.பி.ஜி. கமகே, மண்முனை மேற்கு உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள் அரச, அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், இராணுவத்தினர்  என பலர் கலந்துகொண்டனர்.

உன்னிச்சை காந்திநகர் கிராமசேவகர் பிரிவில் இடம்பெற்ற இந் நிகழ்வின்போது இதன்போது முதற்கட்டமாக சுமார் இரண்டு ஏக்கர் காணியில்  மரங்கள் நடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

காடுகள் அழிக்கப்பட்டுவரும் நிலையில் காடுகளை மீண்டும் உருவாக்கி நாட்டு மக்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் சிறந்த ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் நோக்குடன் ஜனாதிபதியின்  சேர்ந்து காப்போம் கிழக்கு எனும் எண்ணக்கருவுக்கமைவாக இத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது என மட்டக்களப்பு 4வது கெமுனு படைப்பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி ஜயந்த ஜயசிங்கே தெரிவித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: