29 Oct 2020

பட்டாபுரத்திற்கு எவ்வாறு கொரோனா வந்து.

SHARE

பட்டாபுரத்திற்கு எவ்வாறு கொரோனா வந்து.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த பட்டாபுரம் கிராமத்திலுள்ள நபர் ஒருவர் கடந்த 22.10.2020 அன்று கொழும்பிலிருந்து புறப்பட்டு 23.10.2020 அன்று பட்டாபுரம் கிராமத்திலுள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இவ்வாறு வெளி மாவட்டத்திலிருந்து நபர் ஒருவர் தமது பிரதேசத்திற்கு வந்துள்ளதை அறிந்த பொதுச் சுகாதார பரிசோதகர் குறித்த நபரை அவரது வீட்டில் தனிமைப் படுத்தியுள்ளனர்.

எனினும் தனிமைப் படுத்தப்பட்ட குறித்த நபருக்கு 26.10.2020 அன்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவு புதன்கிழமை (28.10.2020) இரவு கிடைக்கப்பெற்றதும் அந்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளதையடுத்து அவர் கெரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த நபர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வேறு எங்கும் சென்றாரா, யார், யாருடன் பழகியிருந்தார், மற்றும், குடும்பஸ்தாரின் விபரங்கள் போன்ற விடையங்கள் தொடர்பில் சுகாதரத்துறையினரும், ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள் நடமாறும் பொது இடங்கள், வர்த்தக நிலைங்கள், மற்றும் வீதிகளிலும் முகக் கவசம், கையுறை போன்றவற்றை அணிந்துள்ளார்களா என்பதை பொலிசார், இராணுவத்தினர், பொது சுகாதார பரிசோதகர்கள், கண்காணித்து வருகின்றனர்.

இது இவ்வாறு இருக்க மக்கள்கூடும் இடங்கள், வர்த்தக நிலையங்கள், உள்ளிட்ட பல பகுதிகளிலும், உள்ளுராட்சி மன்றத்தினர் கிருமி நாசினி விசிறி வருவதுடன், சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது. 


SHARE

Author: verified_user

0 Comments: