1 Oct 2020

பாடசாலை சிறுவர் பாதுகாப்புக் குழுக்களை பலப்படுத்த புதிய திட்டம்

SHARE

பாடசாலை சிறுவர் பாதுகாப்புக் குழுக்களை பலப்படுத்த புதிய திட்டம்.கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கமைவாக பிரதேச செயலக பிரிவுகளில் பாடசலைகளை மையப்படுத்தி செயற்பட்டு வரும் சிறுவர் பாதுகாப்புக் குழுக்களைப் பலத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் மாணவர்களின் சந்தோசம் மற்றும் கவலைகளை தெரியப்படுத்தும் ஹெப்பி அன்ட் சேட் பொக்ஸ் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 


இதனடிப்படையில் செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 51 பாடசாலைகளுக்கான பெட்டிகள் உலக தரிசன நிறுவனத்தின் அனுசரனையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் என். வில்வரத்தினம் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. 

இதனூடாக பெறப்படும் முறைப்பாடுகள் மற்றும் மாணவர்களின் உணர்வு வெளிப்பாடுகளை பொருத்தமான முறையில் கையாள்வதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளுகுக் தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. 

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் து. யேசாந்தினியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி. நிஷா ரியாஸ், கல்குடா கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர மு. ஐPவாகரன்;,  ஏறாவூர் பற்று கோட்டக்கல்வி அதிகாரி  திருமதி. ரு.விவேகானந்தன், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ந.கோமதி, உலகதரிசனம் அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் அமுதன், பாடசாலை அதிபர்கள் மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.











SHARE

Author: verified_user

0 Comments: