15 Oct 2020

இடைவிடப்பட்டிருந்த மட்டு.பொது நூலகத்தின் திருத்தப் பணிக்கு முதற்கட்டமாக அரசு 216 மில்லின் ஒதுக்கீடு – மட்டு.மாநகர முதல்வர்.

SHARE

(ஜனா)

இடைவிடப்பட்டிருந்த  மட்டு.பொது நூலகத்தின் திருத்தப் பணிக்கு முதற்கட்டமாக அரசு 216 மில்லின் ஒதுக்கீடு – மட்டு.மாநகர முதல்வர்.

மட்டக்களப்பு நகரில் நிருமாணிக்கப்பட்டு பூர்தி செய்யாமல் கிடைக்கின்ற, பொது நூலகத்தின் நிர்மாணப் பணிகள்  தொடர்பில் புதன்கிழமை(14) கருத்துத் தெரிவிக்கும் போதே மட்டக்களப்பு மநாகர மேயர் தி.சரவணபவன் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.  

2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டில் இடைநடுவில் விடப்பட்ட மட்டக்களப்பு பொது நூலகக் கட்டடத்தை முடிவுறுத்த வேண்டும் என்று நாங்கள் பதவியை ஏற்ற நாள் முதல் அதற்கான வேலைகளை ஆரம்பித்திருந்தோம்.

குறிப்பாக நாடாளுமன்ற அனுமதி, அமைச்சரவை அனுமதி மற்றும் தேசிய கட்டிடங்கள் திணைக்களத்தின் அனுமதி என்பன பெறப்பட வேண்டியிருந்தது. அதனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் முயற்சியால் இவ்அணுமதிகளை பெற்றதோடு அமைச்சரவை அனுமதியினை 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி பெறக்கூடியாதாகவும் இருந்தது.

இதன்பின் 345 மில்லியன்கள் மதிப்பிடப்பட்டு, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூலமாக 169.87 மில்லியன்களும், அப்போதைய  கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம ஊடாக  மாகாண சபையிலிருந்து 100 மில்லியன்களும் மிகுதி பணத்தினை மாநகர சபையும் ஒதுக்குவதென்ற தீர்மானத்தில் 2019 ஆம் ஆண்டு தேசிய கட்டிடங்கள் திணைக்களத்துக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

தேசிய கட்டடங்கள் திணைக்களத்தினால்  ஒப்பந்தம் கோரப்பட்டு ஒப்பந்ததாரர் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், ஈஸ்டர் குண்டு தாக்குதல், ஜனாதிபதி தேர்தல் போன்ற காரணங்களால் இழுபறி நிலை காணப்பட்டு ஒப்பந்ததாரருக்கான அமைச்சரவை அனுமதி காலதாமதமாகிய காரணத்தினால் 2019 இல் இவ்வேலைகளை எம்மால் ஆரம்பிக்க முடியாது போயிருந்தது.

தற்போது புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானத்தின் மூலமாக முதல் தளத்தினை நிறைவுறுத்துவதற்காக 216 மில்லியன்கள் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.  எனவே மிக விரைவில் இந்த கட்டுமானம் ஆரம்பிக்கப்படும்.

தெரிவு செய்யப்பட்ட ஒப்பந்தக்காரர் இந்த வேலையை சரியான முறையில் செய்து முடிப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதேபோல் இதை முழுமையாக கண்காணித்து அமுல்படுத்தும் நிறுவனமான தேசிய கட்டடங்கள் திணைக்களம் அந்த கட்டிட வேலைகளை எங்களுக்கு முறையாக முடிவுறுத்தி தருவார்கள் என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது. என தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: