6 Sept 2020

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றியீஸ்வரர் ஆலயத்தின் தேரோட்டம்.

SHARE
 

(தாஸ்)

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றியீஸ்வரர் ஆலயத்தின் தேரோட்டம்.கிழக்கில் தேரோடும் கோயில் என பெயர்பெற்ற மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றியீஸ்வரர் ஆலயத்தின் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (06) மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.  இதன்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து, தேர் இழுத்தனர்.

இதன்போது சுவாமிக்கு வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்று, பின்னர் சிவன் உடன் பார்வத்தி சமேதராய் சித்திரத் தேரிலும், பிள்ளையார் பிள்ளையார் தேரிலும், வலம் வந்தனர்.

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோன்றீஸ்ரர் ஆலய வருடாந்த திருவிழா 21.08.2020 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது திங்கட்கிழமை (07.09.2020)  தீத்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது. 





































SHARE

Author: verified_user

0 Comments: