9 Sept 2020

ஆரையம்பதி சுப்பிரமணியம் வித்தியாலயத்தின் பிரதி அதிபராக திருமதி தவமணிதேவி சண்முகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

SHARE

(ரகு)

ஆரையம்பதி சுப்பிரமணியம் வித்தியாலயத்தின் பிரதி அதிபராக திருமதி தவமணிதேவி சண்முகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆரையம்பதியின் கல்வி வரலாற்றின் பழமையான பாடசாலையாகிய ஆரையம்பதி சுப்பிரமணியம் வித்தியாலயத்தின் பிரதி அதிபராக திருமதி தவமணிதேவி சண்முகநாதன் அவர்கள் அப்பாடசாலையின் அதிபரினால் இன்றையதினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக கல்வி புலத்தில் ஆசிரியராக கடமையாற்றி மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து கல்வி வலயங்களிலும் தனது குருத்துவ சேவையினூடாக பல புத்திஜீவிகளை கல்வியாளர்களை உருவாக்கி இனமத பாகுபாடற்ற வகையில் அனைத்து பிரதேசங்களிலும் ஆசிரியப் பணியாற்றிய அனுபவமிக்க கல்வியாளரே பிரதி அதிபராக ஆரையம்பதி சுப்பிரமணியம் வித்தியாலயத்தில் கடமையை பொறுப்பேற்றுள்ள திருமதி தவமணிதேவி சண்முகநாதன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தனது ஆசிரியப்பணியை ஆரையம்பதி காங்கேயனோடை அல் அக்க்ஷா மகா வித்தியாலத்தினூடாக ஆரம்பித்து அதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கல்வி வலயங்களிலும் பல பாடசாலைகளிலும் தனது கல்வி பணியை பூரணமாக நிறைவேற்றி பல புத்திஜீவிகளை உருவாக்கி நிகழ்காலத்தில் ஆரையம்பதி சுப்பிரமணியம் வித்தியாலத்தினூடாக அப்பாடசாலையின் அதிபர், பெற்றோர், ஆசிரியர் சங்கம், மற்றும் ஆரையம்பதியின் புத்திஜீவிகளின் வேண்டுகோளிற்கிணங்க கல்வி புலத்தில் மாணவர்களின் சேர்க்கையின்றி மூடப்படும் நிலைநோக்கி பயணித்த ஆரையம்பதியின் பழம் பெரும் பாடசாலையாகிய ஆரையம்பதி சுப்பிரமணியம் வித்தியாலயத்தினை மறுமலர்ச்சி நிலைநோக்கி நகர்த்தி அப்பாடசாலையின் பிரதி அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.


மட்டக்களப்பில் யுத்தம் இடம்பெற்றுகொண்டிருந்த இறுதிக்காலப் பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வவுணதீவூ மங்கிக்கட்டு வித்தியாலயத்தில் பல தாக்குதல்கள் இடம்பெற்ற மிககொடூரமான, அபாயகரமான காலங்களின் போதும் ஆரையம்பதியிலிருந்து அப்பாடசாலைக்கு  சென்று ஆசிரியராக, பிரதி அதிபராக அப்பகுதியிலுள்ள ஏழைச்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்போடு மிகுந்த சிரமங்களின் மத்தியிலும் தனது தியாகமிக்க கல்வி பணியை ஆற்றிய ஆளுமைமிக்க கல்வியாளரே இவர் என்பதும் எடுத்துக்காட்டத்தக்கதாகும்.



SHARE

Author: verified_user

0 Comments: