4 Sept 2020

மக்களிடம் தற்போது இருக்கின்ற தென்னைகளையாவது பாதுகாப்பதற்கு முயற்சிகளை எடுக்க வேண்டும் - தென்னை பயிர் செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் திருமதி.பிரேமினி ரவிராஜ்.

SHARE

மக்களிடம் தற்போது இருக்கின்ற தென்னைகளையாவது பாதுகாப்பதற்கு முயற்சிகளை எடுக்க வேண்டும் - தென்னை பயிர் செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் திருமதி.பிரேமினி ரவிராஜ்.
இலங்கையில் சர்வதேச தென்னை தினத்தை முன்னிட்டு சகல பகுதிகளிலும் விழாக்கள், பயிற்சிகள் வழங்கல், நாற்றுக்கள் வழங்குதல் போன்ற இடம்பெற்று வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திலும், எதிர்வரும் 8 ஆம் திகதி வரைக்கும் பல பகுதிகளிலும், பலவராக இடம்பெறவுள்ளன.  அதற்கிணங்க நாம் மட்டக்களப்பு பௌத்த மத்திய நிலையத்தில் கடந்த முதலாம் திகதி தென்னை நான்றுக்களை வழங்கி அதற்குரிய பயிற்சிகளையும் வழங்கியிருந்தோம், பின்னர் இரண்டாம் திகதி வவுணதீவு பிரதேச சபையின் உத்தியோகஸ்த்தர்களுக்கு தென்னை நாற்று தொடர்பிலான விளக்கங்களையும், மூன்றாம் திகதி நடமாடும் தென்னை நாற்றுக்கள் விற்பனையும், இன்று நான்காம் திகதி இந்து ஆலயங்கள், மற்றும் இஸ்லாமிய பள்ளிவாசல்களை முன்னிலைப்படுத்தி நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. என தென்னை பயிர் செய்கை சபையின் மட்டக்களப்பு  பிராந்திய முகாமையாளர் திருமதி.பிரேமினி ரவிராஜ் தெரிவித்தார்.

சர்வதேச தென்னை தினத்தை முன்னிட்டு, “தென்னை என்பது நாட்டில் பெறுமதி வரையறுக்க முடியாத ஒன்றாகும்” எனும் கருப்பொருளின்கீழ்  இலங்கையில் சகல பகுதிகளிலும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. 

அந்த வகையில் தென்னை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட, முனைக்காடு மேற்கு கிராமத்திலுள்ள கொட்டாம்புல பிள்ளையார் மற்றும் முத்துமாரியம்மன் ஆலயத்தில், வெள்ளிக்கிழமை (04) நிகழ்வு இடம்பெற்றது. 

இதன்போது தென்னைப் பயிர்ச் செய்கை சபையினரால், உயர் வர்க்க தென்னங்கன்றுகளும், மற்றும் நாட்டின் பாரம்பரிய, தென்னை வர்க்கங்களும், பயிரிடப்பட்டு அதனை எவ்வாறு பராமரிப்பது என்பது தொடர்பிலான பயிற்சிமுறையும் வழங்கப்பட்டன. இதன்போது கலந்து கொண்டு தென்னை நாற்றுக்களை வழங்கி பயிற்சிகளை வழங்கி வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

தென்னை மனித வாழ்வியலோடு ஒன்றிய ஒரு பயிராகும். இதன் பயன்களை பிறர் சொல்லி தெரிய வேண்டியதில்லை. மனித உயிருக்குச் சமமான ஒரு பயிர்தான் தென்னையாகும். ஒரு தென்னையின் வாழ் நாளில் மனித சமுதாயம் கிட்டத்தட்ட 3 தலைமுறைகளைச் சந்திக்கும் எனலாம். ஆனாலும் நகரமயமாக்கலாம் தென்னங் காணிகள் சிறிது சிறிதாக அழிக்கப்பட்டு, கைத்தொழில், மற்றும் கட்டங்களும் அமைக்கப்படுகின்றன. இதனால் தென்னை ஏக்கர்களின் அளகுவு குறைந்து கொண்டு வருகின்ற. இதனைத் தடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

குறைந்தது மக்களிடம் தற்போது இருக்கின்ற தென்னைகளையாவது பாதுகாப்பதற்கு முயற்சிகளை எடுக்க வேண்டும். இதற்காக வேண்டி சிறந்த நடுகை முறைகளையும் மக்களுக்கு விளக்கமளித்து வருகின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது கொக்கட்டிச்சோலை பிரதேச தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் சோ.திருமாறன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



















SHARE

Author: verified_user

0 Comments: