29 Sept 2020

கலைகள் மூலம் நல்லிணக்க செயல்முறையை வலுப்படுத்தும் ஆர்ட்சதோன் கலைத்திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை.

SHARE

கலைகள் மூலம் நல்லிணக்க செயல்முறையை வலுப்படுத்தும் ஆர்ட்சதோன் கலைத்திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை.

கலைகள் மூலம் நல்லிணக்க செயல்முறையை வலுப்படுத்துவதற்காக,  திறன் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறை ஒன்று மட்டக்களப்பில் கடந்ம 25 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரையில் நடைபெற்று முடிந்துள்ளது.

ஐpஐஸட்  (GIZ) மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் ஆகியவற்றால் செயல்படுத்தப்படும், இலங்கைத் திட்டத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தினால் அமுலப்படுத்தும் நல்லிணக்க செயல்முறைகளின் ஒரு பகுதியாக இப்பயிற்சிப் பட்டறை முன்னெடுக்கப்பட்ட்டிருந்தது. 

நடிகர்கள், தயாரிப்பாளர்கள், குறும்படத் தயாரிப்பாளர்களர், எழுத்தாளர்கள், தொழில் நுட்ப உதவியாளர்கள், பாடகர்கள், ஓவியர்கள், என பல்வகைப்பட்ட கலைஞர்களாக வடக்கு கிழக்கு மலையகம் என இலங்கை முழுவதிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 23 தமிழ் தமிழ் முஸ்லிம், கலைஞர்கள் பங்கு பற்றியிருந்தனர்.

இந்த பயிற்சிப் பட்டறைக்கு கலை நிபுணர் தானியா வர்ணகுலசூரியா மற்றும் பிரபல கலைஞர் சுரேன் தம்பிராஜா, திரைப்பட இயக்குனர், ஜூலியன் ஆனந்தரமணன் மற்றும் ஜோசுவா ஹெபி, ஆகியோர் இணைந்து பயிற்சிகளையும், விளக்கங்களையும் வழங்கி வருகின்றனர்.

மேலும் இதன்போது பிரிட்டிஷ் கவுன்சிலின் கல்வி மற்றும் ஆங்கில இயக்குநர்  லூயிஸ் கோச்சர், மார்க் சாமுவேல் மற்றும் விஜயபாலா சின்னதம்பி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது பயிற்சி பெற்ற கலைஞர்கள் நல்லிணக்க செயல்முறையை வலுப்படுத்தும் வகையில் மல்டிமீடியா கலைப்படைப்புகளுக்களுக்குரிய திட்டங்கள் உருவாக்கவும், திட்ட நிதியுதவிக்கான தங்கள் திட்ட முன்மொழிவுகளை பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு சமர்ப்பிக்க வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிகரமான கலைத் திட்டங்கள் மூலம் இலங்கை முழுவதும், கலை மூலம் மக்கள் மத்தியில் நல்லிணக்க செயல்முறையை வலுப்படுத்துவதற்கான திறன்கள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு சான்திதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. 































SHARE

Author: verified_user

0 Comments: