7 Sept 2020

ஆரோக்கிய வாழ்க்கைக்கான விழிப்புணர்வு நடைபவனி.

SHARE

(ராஜ்)

ஆரோக்கிய வாழ்க்கைக்கான விழிப்புணர்வு நடைபவனி.

தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் உலகவங்கியின் அனுசரணையுடன் இடம்பெறும் Primary Care System Strengthening Project (PSSP) திட்டத்தின் ஒரு அங்கமாக உடற்பயிற்சியினை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் நோக்குடன் இடம்பெறும்  "வருமுன் காப்போம்"  நடைபவணி நேற்று  காலை 6.30 மணியளவில் ஆரம்பமானது.

குறித்த நடைபவணியானது தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் இருந்து தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை வரை நடைபெற்றது. உடற் பயிற்சியின் ஆரம்ப கட்ட நடைபவணியை பிரதேச செயலக வளாகத்தில் வைத்து விளையாட்டு உத்தியோகத்தர் ஹாரிஸ் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டு உடற் பயிற்சியும் நடைபெற்றதையடுத்து வீதி ஊடாக நடை பவணி இதன் பின்னர் இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் ஜீவராஜ் தலைமையில் இடம் பெற்ற இக் குறித்த நடைபவணியில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகௌரி ஸ்ரீபதி,வைத்தியசாலை வைத்தியர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,புதிய பட்டதாரி பயிலுனர்கள்,தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள்,தம்பலகாமம் பொலிஸ் நிலைய பொலிஸார்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.


























SHARE

Author: verified_user

0 Comments: