22 Sept 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெனிஸ் விளையாட்டினை மேம்படுத்தும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் டெனிஸ் விளையாட்டினை பயிற்றுவித்து வருகின்றது.

SHARE

இலங்கை டெனிஸ் சம்மேளனத்துடன் இணைந்து மட்டக்களப்பு லேக் வியு டெனிஸ் சங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெனிஸ் விளையாட்டினை மேம்படுத்தும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் டெனிஸ் விளையாட்டினை பயிற்றுவித்து வருகின்றது.
அந்தவகையில் இலங்கை டெனிஸ் சம்மேளனத்தின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு லேக் வியு டெனிஸ் சங்கம் அரச அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் வயதுவந்தவர்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றம் மற்றும் வேலைப்பளுவினால் ஏற்படும் மனசோர்வினை மற்றும் வகையில் வளர்ந்தோர்களுக்கான டெனிஸ் விளையாட்டினை மட்டக்களப்பு லேக் வியு டெனிஸ் சங்கம் ஆரம்பித்துள்ளது.அதற்கான ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு லேக் வியு டெனிஸ் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

பாதிப்பினைதேசிய பங்குபற்றல் அதிகாரி எஸ் .சியானந்த் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட டெனிஸ் பயிற்சி நிலைய தலைவர் என் .ஜனன் , தலைமையில் நடைபெற்ற வயதுவந்தோருக்கான டெனிஸ் பயிற்சிக்கான ஆரம்ப நிகழ்வில் மாவட்ட டெனிஸ் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி .தர்சன் , மாவட்ட டெனிஸ் பயிற்சி நிலையத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர் வி. தினேஷ் , அபிவிருத்தி உத்தியோகத்தர் . எஸ் .ஹரிபிரசாத் மற்றும் பாடசாலை மாணவர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்

இதேவேளை இலங்கை டெனிஸ் சம்மேளனத்தின் நிதி உதவியின் மட்டக்களப்பு மாவட்ட டெனிஸ் பயிற்சி நிலையத்திற்கு சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான டெனிஸ் விளையாட்டுக்கான ரெக்கட்டுக்களும் வழங்கி வைக்கப்பட்டன.







SHARE

Author: verified_user

0 Comments: