6 Sept 2020

மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா திருத்தல திருவிழா நிறைவுநாள்.

SHARE

மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா திருத்தல திருவிழா நிறைவுநாள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் புராதானமானதும் பழமையானதுமான ஆயித்தியமலை புனித திருத்தலமான சதாசகாயமாதா திருத்தல திருவிழா கடந்த ஆகஸ்ட் 28 ஆந்திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை(6) மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய பொன்னையா ஜோசப் ஆண்டகையின் தலைமையில் விசேட ஆராதனையும் திருவிழா இறுதிநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு இனிதே நிறைவு பெற்றது. 

மட்டக்களப்பில் 150 வருடங்கள் தொன்மைவாய்ந்த சதா சகாயமாதா ஆலயம் புகழ்பெற்ற திருத்தலமாகும். அரசாங்க வர்தமானிமூலம் அங்கீகரிக்கப்பட்ட இத்திருத்தலத்தில் வருடாந்த திருவிழா அரசாங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றவருகின்றது. நீர் கொழும்பு, அம்பாரை மற்றும் நாட்டின் பலபாகங்களிலுமிருந்து கிரிஸ்தவ அடியார்கள் இத்திருத்தலத்தை நோக்கி வருவதுடன் அங்கு தங்கியிருந்து திருவிழவில் பங்குபற்றி வருகின்றமை விசேட அம்சமாகும். 


தீராத நோய்கள் குணமடைதல், குழந்தை பாக்கயமற்றவர்கள் குழந்தை வரத்தினைப் பெற்றுக் கொள்ளல் போன்ற காரணங்களுக்காக அடியார்கள் நேர்ச்சை வைத்து இத்திருத்தலத்திற்கு பாதையாத்திரை மேற்கொண்டு நம்பிக்கை வைத்து வணக்கவழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய இறுதி நாள் திருவிழா நிகழ்வின்போது நாட்டின் பலபாகங்களிலுமிருந்து கிருஸ்தவ பக்தர்கள் பெருமளவில் வருகைதந்திருந்தனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் விதத்தில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இந்நிகழ்வினை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை சுகாதார மற்றும் பாதுகாப்புப் பரிவகள் ஏற்பாடு செய்திருந்தன.

மேலும் வவுனதீவு பிரதேச செயலகம், உள்ளுராட்சி சபை, நீர்பாசன திணைக்களம், வீதி அபிவிருத்தி திணைக்களம், பொலிஸ் திணைக்களம், பாதுகாப்புப் பிரிவு, சாரணிய இயக்கம் மற்றும் சமுக அமைப்புக்கள் மற்றும் கிருஸ்தவ அமைப்புக்கள் இணைந்து இத்திருவிழாவிற்கு பங்களிப்பு நல்கியிருந்தன.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவான், மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார், வவுனதீவு உதவி பிரதேச செயலாளர் திருமதி. சதா.சுபா, கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி. சந்திரகாந்தா மகேந்திரனாதள், பொலிஸ் மற்றும் இராணுவ உயர்அதிகாரிகள், பொதுமக்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: