2 Sept 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களுக்கு வேலைவாய்பு, வீட்டு திட்டம் வாழ்வாதாரம் மற்றும் நஷ்ட ஈடுகளை வழங்கி காணாமல் ஆக்கப்பட்ட பிரச்சனையை அரசு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என கோரி ஜனாதிபதிக்கு மகஜர்

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களுக்கு வேலைவாய்பு, வீட்டு திட்டம் வாழ்வாதாரம் மற்றும் நஷ்ட ஈடுகளை வழங்கி காணாமல் ஆக்கப்பட்ட பிரச்சனையை அரசு முடிவுக்கு கொண்டு வரவேண்டும்
என கோரி ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அமைப்பினர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனை கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமாரிடம் செவ்வாய்கிழமை (01) கையளித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அமைப்பின் தலைவி யோகேந்திரன் வீணா தலைமையில் மட்டக்களப்பு இருதயபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனை காரியாலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நூற்றுக்கு மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகள் கலந்து கொண்டு இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இதன் போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்…வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அமைப்பு கடந்த 11 வருடங்களாக போராடினோம். எந்தவிதமான தீர்வும் மக்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் எங்களை வைத்து சில அரசியல்வாதிகள் சில சமூகத் தலைவர்கள் பேரம் பேசி அவர்கள் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் இரு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து காணாமல் போன உறவுகள் ஒருவரும் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் திருகோணமலை, அம்பாறை, கிளிநொச்சியில் இருந்து ஆட்களை பேருந்துகளில் மட்டக்களப்புக்கு கொண்டு வந்து இது மட்டக்களப்பு மக்கள் என ஆர்பாட்டத்தில் ஈடுபடுத்தினர்.

அது மட்டுமல்ல அவர்களுக்கு சாப்பாடு மற்றும் கைசெலவுக்காக 500 ரூபாய் பணமாக கொடுத்து அவர்களை விலை கொடுத்து அழைத்து வந்து எங்களுக்கு உயிர்தான் தேவை எந்த விதமான நஷ்ட ஈடும் வேண்டாம் என வன்னியில் இருக்கின்றவர்கள் மட்டக்களப்பையும் சேர்த்து பொய்யானவைகளை தெரிவித்து சில அரசியல் வாதிகளுடன் சேர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

போராட்ங்களில் ஈடுபடுபவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு இங்கு வந்து எங்களை வைத்து அவர்கள் சம்பாதிக்கின்றனர். எனவே மட்டக்களப்பு மாவட்டத்தை பெறுத்தவரையில் படித்த பிள்ளைகளுக்கு அரசாங்க வேரைவாய்ப்பு, நஷ்டஈடுகளைதான் நூற்றுக்கு நூறுவீதமானவர்கள் விரும்புகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இதுவரை எந்தவிதமான நஷ்டஈடுகளோ கொடுப்பனவே கிடைக்கவில்லை. இவர்கள் தங்களுக்கான வீட்டுதிட்டம் நஷ்டஈடுகள் வேண்டும் என நூற்றுக்கு நூறுவீதமானவர்கள் விரும்புகின்றனர். இவர்கள்தான் உண்மையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள். 

எங்களை காட்டி சிலர் விற்று பணம் சம்பாதிக்கின்றனர். அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவே படித்த பிள்ளைகளுக்கு உத்தியோகம், நஷ்டஈடு, வீட்டுத் திட்டம், மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.

அதேவேளை இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம் என்று கூறியுள்ளனர்.

இதில் கலந்து கொண்ட காணாமல் போனேர்களின் உறவுகள் அமைப்பாளரிடம் மகஜர்களை கையளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.





SHARE

Author: verified_user

0 Comments: