10 Sept 2020

வெகுவிமர்சையாக இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரையம்பதி கந்தசுவாமி பேராலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி பெருவிழா.

SHARE

(ரகு)

வெகுவிமர்சையாக இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரையம்பதி கந்தசுவாமி பேராலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி பெருவிழா.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரையம்பதி கந்தசுவாமி பேராலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி பெருவிழா வெகுவிமரிசையாக இடம்பெற்றது. ஆரையம்பதி கந்தசுவாமி பேராலயத்தின் உள்ளே பரிவார தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் விஷ்ணுவிற்கு பூசை புனஸ்காரங்கள் இடம்பெற்று அலங்கரிக்கப்பட்ட தெய்வமூர்த்தமாக சுவாமி உள்வீதி வலம்வந்தார் உலகம்பூராகவும் இன்றையதினம் கிருஷ்ணருடைய அவதார தினமாகிய கிருஷ்ண ஜெயந்திப் பெருவிழா நடைபெற்றுவருகின்றது. உலகத்தைக் காத்து ரட்சிப்பது இறைவன் என்ற மாபெரும் சக்தி காப்பதும் அந்த இறைவன்தான். அழிப்பதும் அந்த இறைவன்தான். அப்படிப்பட்ட இறைவனில், பரமாத்மாவான ஸ்ரீ மகா விஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானது ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர்.

ஸ்ரீ கிருஷ்ணர் பல லீலைகளைப் புரிந்து, மக்களைக் காத்து அருளினார். மேலும், மகாபாரதப் போரில் பல தத்துவங்களை உணர்த்தி பகவத் கீதை என்ற அற்புதத்தை அருளினார். கண்ணா, கிருஷ்ணா என்றாலே நம்முடைய மனது ஆனந்தத்தில் ஆழ்ந்திடும். அப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி தினப் பண்டிகையானது இந்தாண்டும் ஆரையம்பதி கந்தசுவாமி பேராலயத்தில் பக்தர்களின் பங்களிப்போடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.







SHARE

Author: verified_user

0 Comments: