1 Aug 2020

வெறுக்கத்தக்க பேச்சுக்கள் பேசுவோரை சிவில் சமூகம் வெறுத்தொதுக்க வேண்டும் சிவில் சமூகத்தின் வகிபாக கூட்டத்தில் வலியுறுத்து.

SHARE
வெறுக்கத்தக்க பேச்சுக்கள் பேசுவோரை சிவில் சமூகம் வெறுத்தொதுக்க வேண்டும் சிவில் சமூகத்தின் வகிபாக கூட்டத்தில் வலியுறுத்து.
அரசியலுக்காக வெறுக்கத்தக்க பேச்சுக்கள் பேசி சமூகங்களை விரிசலடையச் செய்யும் அரசியல்வாதிகளை சிவில் சமூகம் வெறுத்தொதுக்க வேண்டும் என மட்டக்களப்பில் சனிக்கிழமை 01.08.2020 இடம்பெற்ற சிவில் சமூகத்தின் வகிபாக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழவினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த விழிப்புணர்வுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையின் இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் பசுமை விடுதியில் சனிக்கிழமை 01.08.2020 இடம்பெற்றது.

சர்வமத உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிதிகள் பங்குபற்றிய இந்நிகழ்வில் எதிர்வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் சிவில் சமூகத்தின் வகிபாகமும் வன்முறை வெறுக்கத்தக்க பேச்சுக்கள் சட்டங்கள் உள்ளிட்ட விடயங்களில் தெளிவு வழங்கும் விழப்புணர்வு கருத்துப் பகிர்வு இடம்பெற்றது.

நிகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் நிறை;வேற்றுக்குழ அங்கத்தவரும் கிழக்குப் பல்கலைக் கழக முன்னாள் உபவேந்தருமான தங்கமுத்து ஜயசிங்கம் வளவாளராகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

முன்னொரு காலத்தில் தேர்தல் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் அரிசி தருவோம் என்பதற்குப் பதிலாக இப்பொழுது சுதந்திரம் உரிமைகள் மதங்கள் பற்றிப் பேசப்படுகின்றது.

சிறுபான்மை இனங்கள் சம உரிமையுடன் இந்நாட்டில் வாழ வேண்டும் என்ற கருத்து சிறுபான்மையினரிடத்தில் மேலோங்கியுள்ளது.

அத்தோடு இப்பொழுது ஆட்சியாளர்களிடம் மேலோங்கியுள்ள விடயம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதேயாகும்.

ஆனால் இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு தேவை என்பது மறுபுறத்தில் மற்ற மூன்றில் ஒரு பிரிவினராக உள்ளவர்களின் விருப்பங்களை, எதிரணியினரின் தேவைகளை, விருப்பமின்மையைப் புறந்தள்ளிவிட்டு  எதேச்சாதிகாரமாக முடிவெடுப்பதற்காக இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக இந்த நாடு அவதிப்படுகிறது என்ற கேள்வியும் எழும்புகிறது.

யாரிடமும் எதுவும் கேட்கத் தேவையில்லை எங்களுக்கு அதிகாரம் இருக்கின்றது என்ற சர்வாதிகார நிலைமைஇந்த நாட்டை மேலும் சிக்கலுக்கள் இழுத்துச் செல்லும்.

தட்டிக் கேட்க ஆளில்லை என்ற நிலை இந்த நாட்டுக்கு எப்பொழுதுமே ஆபத்தானது.

ஜனநாயகம் என்று நாம் கருதுவது பேசிக் கதைத்து ஆக்கபூர்வமான தீர்மானத்திற்கு வருவதைத்தான் குறிக்கும்.

மற்றவரின்ன் கருத்துக்களைக் கேட்க வேண்டும் அதனடிப்படையில் கருத்துக்களுக்கு சாதகமான முடிவு கிடைப்பதுதான் ஜனநாயகம்; என்றாகிவிடும். அதுவல்லாமல் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைத் தேடி நகர்தல் என்பது சர்வாதிகாரிப் போக்கை நோக்கி நகர்த்துவதற்கு துணை செய்யும்.

இவ்வாறான நிலையில் நாட்டு மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களிடையே இனவாதத்தையும், மதவாதத்தையும், வெறுக்கத்தக்க பேச்சுக்களையும், வன்முறைகளையும் தோற்றுவிக்கின்றனர்.

எனவே இவற்றைச் சிவில் சமூகம் சீர்தூக்கிப் பார்த்து வெறுத்தொதுக்க வேண்டும்” என்றார்.






SHARE

Author: verified_user

0 Comments: