14 Aug 2020

கொவிட் - 19 திட்டத்தின் கீழ் இலங்கைச் செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் பாடசாலைகளுக்கு பாதுகாப்பான முறையில் கைகளுவும் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

SHARE

கொவிட் - 19 திட்டத்தின் கீழ் இலங்கைச் செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் பாடசாலைகளுக்கு பாதுகாப்பான முறையில் கைகளுவும் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் கொவிட் - 19 திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 10  பாடசாலைகளுக்கு பாதுகாப்பான முறையில் கைகளுவும் உபகரணங்கள் வெள்ளிக்கழமை (14) வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைச் செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராசா தெரிவித்தார்.

கொவிட் - 19 திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு வீடாகச் சென்று கைகளுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் போணுதல் போன்ற விடையங்கள் தொடர்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அத்துடன் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள போரூந்து தரிப்பிடங்கள், பொதுச் சந்தை உள்ளிட்ட பொது இடங்களில் கொவிட் - 19 தொடர்பில் விழிப்புணர்வு ஏற்பட்டுத்தப்பட்டு வருகின்றன. அதுபோல் பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும், கொவிட் - 19 இஸ்றிக்கர்கள் ஒட்டப்பட்டு, வருவதோடு, அது தொடர்பிலான துண்டுப்பிரசுரங்கள் பொது இடங்களிலும், வைக்கப்பட்டு வருவதாக த.சவந்தராசா மேலும் தெரிவிதார்.















SHARE

Author: verified_user

0 Comments: