4 Jul 2020

மட்டக்களப்பில் மீளத்திறக்கப்படும் சிறிய பாடசாலைகளுக்கு லிப்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் உடல் வெப்ப அளவீட்டுக்கருவிகள்இ பதாதைகள் வழங்கி வைப்பு

SHARE
மட்டக்களப்பில் மீளத்திறக்கப்படும் சிறிய பாடசாலைகளுக்கு லிப்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் உடல் வெப்ப அளவீட்டுக்கருவிகள்இ பதாதைகள் வழங்கி வைப்பு.
கொரோனா தொற்று அச்சத்தின் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் அரசின் அறிவுறுத்தல்களுக்கமைவாக படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பிற்காக கொரோனா விழிப்புணர்வு பதாதைகளையும்இ உடல் வெப்ப அளவீட்டுக்கருவிகளையும் மட்டக்களப்பில் இயங்கி வரும் லிப்ட் அமைப்பினால் வெள்ளிக்கிழமை (03) வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பில் பொதுமக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் இயங்கிவரும் வசதி குறைந்த சிறய பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களின் நலன்கருதி கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளத் தேவையான சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய பதாதைகள்இ ஸ்டிக்கர்கள் மற்றும் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் ஆசிரியர்களது உடல் வெப்பநிலையினை அளவீடு செய்யும் டிஜிடல் வெப்ப அளவுக் கருவிகளைளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது. 

பெண்கள் வலுவூட்டல் மற்றும் கல்வி மேம்பாட்டு செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் லிப்ட் அமைப்பின் ஏற்பாட்டில் ஐக்கிய இராச்சியத்தில் வசித்துவரும் நண்கொடையாளர் செந்தூரன் தேவேன் திரராஜாவின் நிதி உதவியில் சுமார் 62 ஆயிரம் ரூபா பெறுமதியான இப்பொருட்கள் 8 சிறிய பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. 

மட்டக்களப்பு அரசடி பிள்ளையார் வித்தியாலயம், கல்லடி இக்னேசியஸ் வித்தியாலயம்இ நாவட்குடா தர்மரத்தினம் வித்தியாலயம்இ மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயம்இ மஞ்சந்தொடுவாய் சாரதா வித்தியாலயம்இ ககாத்தான்குடி அல்ஹஸனாத் வித்தியாலயம்இ ஆரயம்பதி சிவமணி வித்தியாலயம்இ கோவில்குளம் விநாயகர் வித்தியாலயம் ஆகிய எட்டு பாடசாலைகளுக்கான இப்பொருட்களை அப்பாடசாலை அதிபர்களிடம் லிப்ட் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானு முரலிதரன் வழங்கி வைத்தார். 

இந்த உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வில் அம்கோர் அமைப்பின் பணிப்பாளர் பீ. முர ளிதரன்இ லிப்ட் அமைப்பின் நிதிப் பணிப்பாளர் பத்மதர்சினி சுபாஸ்கரன்இ வெளிக்கள இணைப்பாளர் வீ. தயானிதி உட்பட பாடசாலை அதிபர்கள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.










SHARE

Author: verified_user

0 Comments: