8 Jul 2020

விளைச்சலுக்கேற்ற விலை இல்லை பயிர்களை இடைநடுவே பிடுங்கு அழிப்பு – களுதாவளை விவசாயிகளின் நிலமை

SHARE
விளைச்சலுக்கேற்ற விலை இல்லை பயிர்களை இடைநடுவே பிடுங்கு அழிப்பு – களுதாவளை விவசாயிகளின் நிலமை.
மட்டக்களப்பு மாவட்டம் மேட்டுநில விவசாயச் செய்கைக்குப் பெயர்போன பிரதேசமாகக் காணப்படும் மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்டதே களுதாவளைக் கிராமமாகும் தமது பாட்டன், பூட்டன் காலத்திலிருந்து பரம்பரை பரம்பரையாக மேற்கொண்டு வந்த தொழில் கத்தரி, மிளகாய், வெற்றிலை, வெங்காயம், பீர்க்கு, பாகல், பயற்றை உள்ளிட்ட, மேட்டுநிலப் பயிற் செய்கையாகும். இவ்வாறு வருடத்தின் 24 மாதமும் ஓய்வின்றி கடற்கரை மணலில், கடும் வெயிலுக்கும், பலத்த மழைக்கும், தாக்குப் பிடித்து உழைத்துச் சம்பாதித்து தமது குடும்பத்தைப் பாதுகாத்து வரும் விவசாயிகள் மத்தியில் இந்த நவீன யுத்திலும் பல சவால்களுக்கு மத்தியில் தமது வாழ்வாதாரத்தை முன்நெடுத்துச் செல்வதாக கவலை தெரிவிக்கின்றனர். 

இதுவரை காலமும் தாம் உற்பத்திற செய்யும் அனைத்து விiளை பொருட்களுக்கும் உரிய விலையை நாங்களே தீர்மானிக்க முடியதவர்களாக எமது உற்பத்திகளுக்கு எம்மிடமிருந்து கொள்வனவு செய்யும் மொத்த வியாபாரிகள்தான் நிலைகயைத் தீர்மானித்து கொள்வவனவு செய்வதுவும், அவதற்கு ஏதோ ஒரு வித்தில் இணங்கி எமது விளைபொருட்களை விற்பனை செய்ய வேண்டிய நிற்பந்தத்திற்குள்ளும் தள்ளப்பட்டுக் கெண்டுதான் எமது வாழ்வாதாரமும்? வாழ்வும் உருண்டோடிக் கொண்டிருபக்கிறது என அப்பகுதி விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர். 

இவ்வாறு உற்பத்தி செய்த மினகாய், கத்தரி, உளிட்ட பயிரினங்களின் விளைச்சலுக்கு தகுந்த விலை இன்மையாலும், பாரிய நோய்த்தாக்கத்தினாலும், தமது செய்கைகளை இடை நடுவில் கைவிட்டு பிடுங்கி அழிப்பதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

இது இவ்வாறு இருக்க அக்கிராமத்தில் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிருமாணிக்கப்பட்டுள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வியாபாரிகளினதும், விவசாயிகளினதும், பாவனைக்கு விடுமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

அந்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தை பாவனைக்கு விட்டால் அதில் கொண்டு சென்று தமது விளை பொருட்களுக்கு ஒரளவிற்கேனும் தமது பொருட்களுக்கு விலைய தாமாகவே தீர்மானிகும் நிலமை ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே மிக விரைவில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் களுதாவளை கிராமத்தில் நிருமாணிக்கப்பட்டுள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து பாவனைக்கு விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.



















SHARE

Author: verified_user

0 Comments: