28 Jul 2020

மழை காலங்களில் விபத்தைத் தடுக்க மட்டக்களப்பில் இரும்பினாலான பாதுகாப்புக் கட்டமைப்பு.

SHARE
மழை காலங்களில் விபத்தைத் தடுக்க மட்டக்களப்பில் இரும்பினாலான பாதுகாப்புக் கட்டமைப்பு.
மழை காலங்களில் ஏற்படும் விபத்தை தடுக்கும் நோக்கோடு மட்டக்களப்பு மாநகர சபையினால் மட்டக்களப்பு அரசடியில் உள்ள சிறிய பாலத்தில் இரும்பினாலான பாதுகாப்புக் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர சபையின் அரசடி வட்டார உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.

இவ்வாறு  மட்டக்களப்பு மாநகரசபையினால்  நிருமாணிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பாலம் பொதுமக்களின் பாவனைக்காக செவ்வாய்க்கிழமை 28.07.2020 கையளிக்கப்பட்டது.

அந்தப் பாலத்தின் மேலாக வெள்ளம் பாயும்போது சிறுவர்கள் பலவீனமானர்கள் வடிகானுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாவதைத் தடுப்பதற்காகவும் பிரத்தியேக வகுப்புக்குளுக்கு செல்லும் மாணவர்கள் பொது மக்கள்  ஆகியோரின் சிரமத்தைத் தடுப்பதற்காகவும் இந்த பாலத்தின் இரு மருங்கிலும் இரும்புக் கம்பி; கட்டமைப்பு அமைக்கப்பட்டதாக பாக்கியநாதன் மேலும் தெரிவித்தார்.

நீண்ட காலமாக உணரப்பட்ட இந்த விடயம் தற்போதைய மாநகர நிருவாக ஆட்சிக் காலத்தில் சாத்தியமாகியுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.

மழை காலங்களில் ஏற்படும் வெள்ள நீர் வாவியினுள் செல்வதற்கான பிரதான வடிகானாக இது காணப்படுவதனாலும்; இந்த தாம்போதியை முன்னர் நிர்மாணித்தவர்கள் அதற்கான பாதுகாப்புக் கட்டமைப்பை ஏற்படுத்தவில்லை என்றும் பொதுமக்கள் முறைப்பாடு தெரிவித்து வந்துள்ள நிலையில் இந்த அபிவிருத்தி இடம்பெற்றுள்ளது.




SHARE

Author: verified_user

0 Comments: