13 Jul 2020

அன்பேசிவம் - அறநெறிப்பள்ளியை வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தது

SHARE
( ராஜ்)

ஞாயிற்றுக்கிழமை (12) ஹட்டன் லெட்சுமி தோட்டம் (மேற்பிரிவு)   (Kirkoswald)    என்னும் இடத்தில் தென்கயிலை ஆதீனம் மலையகம் சார்பில் அன்பேசிவம்.சிவனருட்சபை   தனது முதலாவது  அன்பே சிவம் - அறநெறிப்பள்ளியை வைபவரீதியாக  ஆரம்பித்து வைத்தது.  

அன்பேசிவம்.சிவனருட்சபையின் மலையக ஒருங்கிணைப்பாளர் திருஇதிவாகர் அவர்கள் மேற்படி அறநெறிப் பள்ளி ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வைத்தார்.

முதலில் தோட்டத்தின் ஆலயத்தின்  பிரதம குருக்களால் மாணவர்களுக்காக விநாயகர் சிவன் அம்மன் ஆகியோருக்கு  சிறப்பு பூசைகள் இடம் பெற்றன.

நிகழச்சியின் தொடக்கத்தில் ஆலய பிரதம குருக்கள் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார், அதனைத் தொடர்ந்து திருஇதிருமதி நவநீதன் மோகனராணி அவர்களும் தோட்ட தலைவர், கோயில் பரிபாலனசபை தலைவரும் அறிநெறி மாணவர் ஒருவரும் மங்கள விளக்கேற்றி வைத்தனர்

அதனைத் தொடர்ந்து திரு.செல்வகுமார் குருசுவாமிகள் அறநெறி வகுப்பை  ஆரம்பித்து சிறுவர்களுக்கான பஜனை ஒன்றையும் செய்து சிறப்பித்தார், ஓம் எனும் பிரணவ மந்திரத்தை சொல்லிக் கொடுத்த குருசுவாமிகள், மாணவர்களுடன் கலந்துரையாடி நாம் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தன்மை பற்றியும்  ஞாபக சக்தி பற்றியும் தியானம் பற்றியும் விளக்கப்படுத்தி  சில நிமிடங்கள் தியானமும்  மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.

நிகழ்வில் தொடர்ந்து திருமதி மோகனராணி நவநீதன் அவர்கள் அறநெறி வகுப்பை சிறப்பாக நடாத்தி னார். அதிகளவு பெண்பிள்ளைகள் கலந்து கொண்ட வகுப்பில் அவர்களுக்கு விநாகர் மந்திரம் இபிரணவ மந்திரம் போன்றவற்றை   கற்பித்துக்  கொடுத்த திருமதி மோகனராணி அவர்கள் இஅறநெறியென்றால் என்னவென்பது பற்றியும், ஒழுக்க விழுமியங்கள் பற்றியும் தெளிவுபடுத்தினார்..

வகுப்பில் கற்றலின்போது செவிமடுத்தல் தொடர்பாகவும்இஅமைதி காத்தல் தொடர்பாகவும் தெளிவுபடுத்தி அறநெறிப் பள்ளியில் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு காடங்களையும் வீட்டுக்குச் சென்று ஞாபகப்படுத்தி மனனம் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். அத்தடன் பஞ்சபுராணம்இதிருமுறைகள் பற்றி சொல்லிக்கொடுத்து அதன் மகிமை பற்றியும் கற்றுக் கொடு;த்தார்.

நாம் எமது சமயத்தை மதித்து பின்பற்றும் அதே வேளை ஏனைய சமயங்களையும் மதிக்கப் பழகிக்கொள்ள வேண்டுமென்ற பண்பையும் சொல்லிக் கொடுத்தார்.அறநெறியில் நாம் சென்று எதிர் காலத்தில் நிறைய சவால்களை நாம் எதிர்கொள்ள வேணடி வருமெனவும்இ அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து  செல்வகுமார் குருசுவாமிகள்  வகுப்பை பொறுப்பேற்று மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களையும் அறிவுரைகளையும் சொல்லிக் கொடுத்தார்.















SHARE

Author: verified_user

0 Comments: