11 Jul 2020

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

SHARE
மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
கொழும்பில் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தமையை கண்டித்தும் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் எனவும் தெரிவித்தும் மட்டக்களப்பில் சனிக்கிழமை(11) கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது.

கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் புகைப்பட ஊடகவியலாளர் ஒருவரின் ஊடகப்பணிக்கு இடையூறு விளைவித்ததுடன் அவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததை கண்டித்தே இந்த கண்ட ஆர்ப்பாட்டமும் கவனஈர்ப்பு போராட்டமும் இடம் பெற்றது.

கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.

மட்டக்களப்பு நகரின் காந்திப்பூவுக்கு முன்னாள் இடம் பெற்ற இந்த ஆர்;ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது  கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் புகைப்பட ஊடகவியலாளர் ஒருவரின் ஊடகப்பணிக்கு இடையூறு விளைவித்து அவரை அச்சுறுத்திய பொலிஸ் அதிகாரி மீது அரசாங்கம் நடவடிக்கை எடு;க்க வேண்டுமென வலியுறுத்தியதுடன் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படல் வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

“தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும், முன்னாள் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ விற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும், ஊடவியலாளர்களின் சமதந்திரத்தைப் பறிக்காதே, ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும், சுதந்திர ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தைப் பறிக்காதே, போன்ற மும்மொழிகழிலும் எழுதப்பட்ட சுலோகங்களை தாங்கி கோசங்களை எழுப்பி இதன் போது ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.























SHARE

Author: verified_user

0 Comments: