1 Jul 2020

மட்டக்களப்பு சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம்; அறுவடை விழா நடத்தி விவசாயிகள் பூரிப்பு.

SHARE
மட்டக்களப்பு சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம்; அறுவடை விழா நடத்தி விவசாயிகள் பூரிப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறுபோக நெல் அறுவடை துரிதமாக இடம் பெற்று வருகிறது. அதற்கிணங்க இம் மாவட்டத்தின் நெல் அறுவடையினை சம்பிரதாய பூர்வமாக விசேட நிகழ்வுகளை நடாத்தி சகல கமநல சேவை பிரிவுகளிலும், விவசாயிகள் நெல் அறுவடை விழாக்களை சமய நிகழ்வுகளுடன் நடாத்தி ஆரம்பித்துள்ளனர்.

இதற்கமைய இம் மாவட்டத்தின் புளுக்குணாவி நீர்ப்பாசனப் பிரிவின் முதலைமடு வட்டை மாவடி முன்மாரி பகுதியிலுள்ள பதின்மூன்று விவசாயக் கண்டங்களின் விவசாயிகள் திங்கட் கிழமை (29) மாவடி முன்மாரிப் பகுதியில் நெல் அறுவடை விழா ஒன்றினை நடாத்தினார்.

பட்டிருப்பப் பிரிவு பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ். சுபாகரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் திருமதி. ரி. டினேஸ், போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி, கிழக்கு மாகாண நீரப்பாசன பணிப்பாளர் எந்திரி எஸ். கணேசலிங்கம், மாகாண நீர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர் வீ. ராஜகோபாலசிங்கம் உட்பட பல அதிகாரிகள் மற்றும் பெருமளவு விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

இங்கு மாவட்ட அரசாங்க அதிபர் பத்ம ராஜா கருத்துரை வழங்குகையில் புளுக்குணாவி பிரதேச விவசாயிகளின் சுமார் ஆயிரத்து ஐந்நூறு ஏக்கர் நெல் வயல்கள் அறுவடைக்கு முந்திய காலத்தில் நீர்ப்பாசனம் இன்றி நீரப்;பாசனத்திற்கு நீர்ப்பற்றாக்குறையாக இருந்த போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் உறுதுணையால் கலுகல் ஓயா நீர்ப்பாசணத்திலிருந்து நீர் கிடைத்ததன் பயனாகவே இன்று இப்பிரதேசத்தில் விவசாயிகள் நெல் அறுவடையினை சிறப்பாக செய்வதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. இதற்கு உதவி செய்த அம்பாறை அரசாங் அதிபரின் பணியினை பாராட்டுகின்றேன்.

இதேவேளையில் அம்பாறை மாவட்ட விவசாயிகள் தற்பொழுது கரைவாகு வட்டப்பிரதேசத்தில் பெய்த அடை மழையினால் நீரில் மூழ்கியுள்ள நெல்வயல்களினை காப்பாற்ற எமது பிரதேசத்தில் சாத்தியமற்ற மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்றுவாயை வெட்டுமாறு கொடுத்த கோiரிக்கையை துறைசார் தொழிநுட்ப அதிகாரிகள் தெரிவித்த பெருத்த பாதிப்புகள் பற்றிய ஆட்சேபயினை அடுத்து நிறைவேற்ற முடியாததை பெரிதும் கவலையடைகின்றேன். எனவே எதிர்காலத்தில் ஆரம்ப கூட்டத்தில் எடுக்கப்படுகின்ற தீர்மானத்திற்கமைய நீப்பாசனம் பெறக்கூடிய வயல்களில் மாத்திரமே நெற்செய்கையை செய்ய விவசாயிகள் முன்வர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இந் நிகழ்வில் நீப்பாசனம் இன்றி உற்பத்தி நெல்லை முழுமையாக அறுவடை செய்யமுடியாமல் போய்விடுமென ஏக்கமடைமந்த விவசாயிகளுக்கு அம்பாறை மாவட்டத்திலிருந்து நீர்ப்பாசனத்தைப் பெற்றுத்தர முயற்சி செய்த அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா மற்றும் இதற்கு உறுதுணையாகவிருந்த அம்பாறை மட்டக்களப்பு நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் பிரதேச செயலாளர்களுக்கு இப்பகுதி விவசாயிகளால் பொன்னாடை போர்த்தியும் சந்தன மாலை அணிவித்தும் விவசாயிகள் கௌரவிப்பு செய்தனர். 







    

SHARE

Author: verified_user

0 Comments: