20 Jun 2020

வாக்குச்சீட்டுக்கள் எண்ணும் பரிச்சாத்த ஒத்திகை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

SHARE
வாக்குச்சீட்டுக்கள் எண்ணும் பரிச்சாத்த ஒத்திகை  மட்டக்களப்பில் இடம்பெற்றது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்கள் எண்ணும் பரிச்சாத்த ஒத்திகை நிகழ்வு சனிக்கிழமை (20) மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் நடைபெற்றது.

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சுகாதார அமைச்சும் இணைந்து சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிமுறை அறிவுறுத்தலுக்கு அமைய எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒத்திகை நிகழ்வுகளை நாடாளாவிய ரீதியில் நடாத்தி வருகின்றது.

அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தல்கள் ஒத்திகை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்ற நிலையில் கடந்த (14)  திகதி வாக்களிக்கும் ஒத்திகை இடம்பெற்றதனைத் தொடர்ந்து சனிக்கிழமை வாக்குச்சீட்டுக்கள் என்னும் ஓத்திகை நிகழ்வு  மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி  அலுவலகருமான திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட தேர்தல்கள் அலுவலக உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தலைமையில் நடைபெற்ற வாக்குச்சீட்டுக்கள் எண்ணும் ஒத்திகை நிகழ்வில் 20 உத்தியோகத்தர்களை கடமைகளுக்கு அமர்த்தி  சுமார் 8000 ஆயிரம் வாக்குச்சீட்டுக்கள் எண்ணும் பரிச்சாத்த ஒத்திகை நடவடிக்கைகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன. 










SHARE

Author: verified_user

0 Comments: