20 Jun 2020

கட்டுரை: கொவிட் 19 பிரச்சினை எப்போது தீரும்?,

SHARE

(துசா) 

கொவிட் 19 பிரச்சினை எப்போது தீரும்?
கொவிட் 19 பிரச்சினை எப்போது தீரும்?, தேர்தல்; எப்போது நடைபெறும் என இருந்தவர்களுக்கு தேர்தல் அறிப்பு வழங்கப்பட்டதனை தொடர்ந்து, தத்தமது பிரச்சார செயற்பாடுகளை ஆரம்பித்துவிட்டனர். ஆக மட்டக்களப்பு மாவட்டத்தில் 5பேரை தெரிவு செய்வதற்காக 304பேர் போட்டியிடுகின்றனர். போட்டியிடுகின்ற அனைவரும் நான்தான் தெரிவு செய்யப்படுவேன் எனக்கூறிக்கொண்டும் திரிகின்றனர். நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் 5பேர் யார் என்பதனை மக்கள்தான் தீர்மானிப்பர். ஏனைய 299பேரும் மீண்டும் வீடுகளில்தான் குந்தப்போகின்றார்கள்.


இதற்கிடையில், கடந்த கால பிரச்சாரத்தினைப் போன்று தற்போதைய பிரச்சார தொனியும் ஆரம்பித்துள்ளது. தம்மையும், தம் கட்சியையும் நல்லவர்களாக காண்பித்து, மற்ற கட்சிகளையும், அதில் போட்டியிடுகின்றவர்களையும் விமர்சித்து வாக்குப்பெறுவதே கடந்த கால பிரச்சாரங்களாக அமைந்தது. அதுபோன்றுதான் இப்போதும், ‘பாட்டு வாய்த்தால் கிழவியும் பாடுவாள்’ என்பது போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறைகளை கூறி தேர்தல் பிரச்சாரப்பணியில் இறங்கியுள்ளனர்.

இச்செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். இதற்கு பதிலாக மக்களிடம் உள்ள பிரச்சினைகளை இனங்கண்டு இதனை தீர்ப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள், தூரநோக்குடனான திட்டமிடல்களை மக்கள் மத்தியில் முன்வைக்க வேண்டும். அவ்வாறான திட்டங்களை ஏற்கும் மக்கள் பொருத்தமான கட்சிகளுக்கு தத்தமது வாக்குகளை பதிவு செய்வர்.

மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில், இவர்களுக்கு வாக்களித்தால் நமக்கு என்ன கிடைக்கப்போகுது, தேர்தல் காலம் வருவார்கள் தேர்தல் நிறைவு பெற்றதும் அவர்களை தேடி நாம் அலையவேண்டும். என்ற மனநிலை இருக்கத்தான் செய்கிறது. இம்மனநிலைதான் மட்டக்களப்பு தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவடைவதற்கு காரணமாகவும் இருக்கின்றது. இதற்காக இவ்வார்த்தைகளை வெறுமனே விட்டுவிட்டுச் செல்ல முடியாது. அவ்வாறான மக்களின் மனநிலையில் மாற்;றத்தினை ஏற்படுத்தி சிறந்த தெரிவுக்கு வாக்களிக்க வேண்டுமென்ற மனநிலையை ஏற்படுத்த வேண்டும்.

மாலைகளுக்கும், சொகுசு வாகனங்களிலும், நான் என்ற ஆகங்காரம் கொண்டவர்களாலும் இம்மனநிலையை ஏற்படுத்த முடியாது. நாம் என்ற தொனியும், மக்களோடு மக்களாக, அவர்களுடன் இறங்கி பேசிப்பழகி அவர்களின் குறைகளைத் தீர்க்கின்றவர்களாலேயே அது சாத்தியமாகும்.

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழலிலும் தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இத்தேர்தலில் சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் இருக்கின்றது. கடந்த கால செயற்பாடுகளில் விமர்சனங்கள் இருந்தாலும், அதற்காக தமது வாக்குகளை அளிக்கமால்விடாது, இம்முறை சரியானவர்களை தெரிவு செய்வதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். இதன்மூலமாகவே சிறந்த ஆளுமையான அரசியல்வாதிகளை உருவாக்க முடியும். சந்தர்ப்பத்தை நழுவவிடாது மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்.     

SHARE

Author: verified_user

0 Comments: