8 May 2020

காத்தான்குடியில் விடுதியொன்று சி ஐ டியினரால் சுற்றிவளைப்பு!(வீடியோ)

SHARE
காத்தான்குடியில் விடுதியொன்று சி ஐ டியினரால் சுற்றிவளைப்பு!
காத்தான்குடி, கடற்கரை கர்பலா பகுதியில் உள்ள விடுதியொன்று சி ஐ டி மற்றும் விசேட அதிரடிப்படை பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (08) சுற்றிவளைக்கப்பட்டு இப்போது தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது.

ஸஹ்ரான் குழுவின் மகளிர் பிரிவுக்காக இந்த இடத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டதாக தற்போது கைதாகியுள்ள பெண்ணொருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த தேடுதல் நடத்தப்படுவதாக சி ஐ டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று இதற்காக இன்று காத்தான்குடி வந்துள்ளதாக அறியமுடிந்தது.











SHARE

Author: verified_user

0 Comments: