7 May 2020

கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் நிவாரண உதவிகள் முன்னெடுப்பு.

SHARE
கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் நிவாரண உதவிகள் முன்னெடுப்பு.
கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினரால் கொரோனா வைரஸ் காரணமாக தொழில் பாதிப்புற்றிருக்கும் குடும்பங்களுக்கான முதற்கட்ட நிவாரண உதவிகள் வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு கித்துள் மற்றும் வெலிக்காகண்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கமைவாக தொழில் அற்ற நிலையில் மிகவும் பாதிப்புற்றிருக்கும் 25 குடும்பங்களுக்கான அத்தியவசிய உலர் உணவுப்பொதிகள் புதன்கிழமை(06) கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால்  குறித்த பிரதேசங்களில் வைத்து மக்களிடம் வழங்கிவைக்கப்பட்டது. 

மக்கள் நலன் காப்பகத்தின் நிதி பங்களிப்புடன் ஒரு குடும்பத்திற்கு தலா ரூபா 2,000 பெறுமதியான அத்தியவசிய பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

அரசியல்வாதிகளோ, ஏனைய நிறுவனங்களோ உதவி செய்ய முன்வராத நிலையில் அரசினால் வழங்கப்பட்ட 5,000 ரூபாவாவை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ள பின்தங்கிய நிலையிலிருக்கும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வழங்கிய உதவிகள் குறித்து இதன்போது அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.













SHARE

Author: verified_user

0 Comments: