7 May 2020

போரதீவு கனேடிய ஒன்றியத்தின் நிவாரணப்பணி.

SHARE
போரதீவு கனேடிய ஒன்றியத்தின் நிவாரணப்பணி.
கோவிட் - 19 எனப்படும் புதியவகை கொரோனா நோயின் தாகத்தினால் சர்வதேசமே நிலைகுலைந்திருக்கின்ற இந்நிலையில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே எதுவித வருமானங்களுமற்ற நிலையில் முடங்கி வாழ்ந்து வருகின்றார்கள்.

எவ்வாறாயிம் ஏதாவது தொழில் செய்து தமது குடும்பத்தைப் பாதுகாத்து வந்த மக்கள் தற்போதைய நிலையில் எதுவித தொழில் வாய்ப்பக்களுமின்றி பெரும் சிரமத்தின் மத்தியில் தமது ஜீவநோபாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

எது எவ்வாறு அமைந்தாலும் அரசாங்கமும், அரச சார்பற்ற அமைப்புக்களும், சில தனிநபர்கள், செல்வந்தர்கள், உள்ளிட்ட பலரதப்பட்ட நிலையிலுள்ளவர்கள் இவ்வாறு வருமானமிழந்து பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களின் ஒருபகுதி உணவுத் தேவைகளை பூர்தி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு கனேடிய ஒன்றியத்தினால் வியாழக்கிழமை (07) பெரியபோரதீவில் வைத்து, ஒரு தொகுதி உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கோவில்போரதீவு, பொறுகாமம், புன்னக்குளம், பிலாலிவேம்பு, முனைத்தீவு, பட்டாபுரம், முனைத்தெரு, பெரியபோரதீவு போன்ற கிராமங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 640 குடும்பங்களுக்கு இதன்போது உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது போரதீவுப்பற்றுப் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர்  எஸ்.திரன், கிராமசேவை உத்தியோகஸ்த்தர் க.வி.உதயகுமார், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குபேரன், போரதீவு கனேடிய ஒன்றியத்தின் இணைப்பாளர் ந.துஷியந்தன், அதன் உறுப்பினர்கள், மற்றும் பயனாளிகள் உள்ளிட் பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். 

















SHARE

Author: verified_user

0 Comments: