23 May 2020

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாகநிவாரண உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன

SHARE
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாகநிவாரண உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன
கொரனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடைமுறைகள்,சுகாதார நடைமுறைகள் காரணமாக தொழில்வாய்ப்புகளை இழந்த மக்களுக்கு தொடர்ச்சியான உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

அரசாங்கம் உதவி திட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் அதற்கு இணைவாக பொது அமைப்புகளும் பல்வேறு உதவிகளை வழங்கிவருகின்றது.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின்எல்லை கிராமங்களில் மிகுந்த வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக நிவாரண உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முறுத்தானை மினுமினுத்தவெளி கிராமத்தில் உள்ள வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக இரண்டாம் கட்ட நிவாரண பணிகள் வழங்கி வைக்கப்பட்டன.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொது மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் பணிகளை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் முன்னெடுத்து வருகிறது.

இதன் இரண்டாம் கட்டமாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட  முறுத்தானை மினுமினுத்தவெளி  கிராமத்தில் வசித்து வரும் 45  குடும்பங்களுக்கான 1200 ரூபாய் பெறுமதியான நிவாரண பொதிகள் நேற்று மாலை வழங்கி வைக்கப்பட்டன.இந்த நிவாரணம் வழங்குவதற்கான நிதி உதவிகளை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வல்வை 21 நண்பர்கள் அமைப்பினர் வழங்கியிருந்தனர்.

உதவி வழங்கும் நிகழ்வில் கிரான் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார்,  செயலாளர் செ.நிலாந்தன்,பொருளாளர் பு.சசிகரன் மற்றும் ஊடகவியலாளர்களான கு.சுபோஜன்,ந.நித்தியானந்தன்,கு.குணலிங்கம், வாசம் அமைப்பின் தலைவர்வே.பிரபாகரன்,கிராம சேவையாளர்,அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரண பொதிகளை வழங்கி வைத்தனர்.

இதன்போது உதவிகளை பெற்றுக்கொண்ட மக்கள் நிதி உதவி வழங்கிய வல்வை 21 நண்பர்கள் அமைப்பினருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

அத்துடன் மக்களுக்கான நிவாரண உதவிகளை தொண்டு நிறுவனங்களிடம் இருந்து பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதில் கிரான் பிரதேச செயலாளர் அவர்களின் செயற்பாடுகள் ஏனைய பிரதேச செயலகங்களுக்கு முன் உதாரணமாக அமைந்துள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்தது.









SHARE

Author: verified_user

0 Comments: