4 Apr 2020

ஊரடங்குச் சட்டத்தினால் தொழிலிழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு.

SHARE

ஊரடங்குச் சட்டத்தினால் தொழிலிழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு.
கோவிட் - 19 எனப்படும் புதியவகை கொரோனா வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடனும், மேலும் மக்களுக்குப் பரவாமலிருப்பதற்காக வேண்டியும், அரசாங்கம் அமுல்ப்படுத்தியிருக்கின்ற பொலிஸ் ஊடரங்குச் சட்டத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற நாளாந்தம் கூலித் தொழில் செய்து வாழ்கின்றவர்களின் நிலமை மிகவும் சிரமமாக உள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எதுவித வருமானங்களின்றி வீட்டிருந்தவாறே குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதென்பது மிகவும் கஸ்ட்டமான நிலமைதான் இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தொகுதியில் அமைந்துள்ள கூலித் தொழில் செய்து வந்த மக்களுக்கு உலர் உணவுப் பெதிகளை வீடு வீடாகச் சென்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினரும், பிரபல சமூக சேவையாளருமான மேகசுந்தரம் வினோராஜ் சனிக்கிழமை (04) வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம், எருவில், பெரியபோரதீவு, பழுகாமம், பட்டாபுரம், உள்ளிட்ட பல கிராமங்களுக்கு அவர் நேரடியாகச் சென்று பருப்பு, அரசி மற்றும் மரக்கறி வகைகள், உள்ளிட்ட பலவற்றை வழங்கியுள்ளார்.

எதுவித உதவிகளுமின்றி தற்காலத்தில் வீட்டில் முடிங்கிக் கிடக்கும் தமக்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் வினோராஜின் உதவி எமக்கு பேருதவியக அமைந்துள்ளது என மக்கள் இதன்போது நன்றி தெரிவித்தனர்.












SHARE

Author: verified_user

0 Comments: