11 Apr 2020

அடிப்படை வசதிகளற்ற இளைஞர் விவசாய திட்ட கிராமத்திற்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

SHARE
(திலக்ஸ்)

அடிப்படை வசதிகளற்ற இளைஞர் விவசாய திட்ட கிராமத்திற்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாய திட்ட கிராமத்தில் வாழ்வாதாரத்தை இழந்த  மக்களுக்கு நிவாரணம் இன்று(11) பழுகாமம் விநாயகர் நெற்களஞ்சியசாலை உரிமையாளர்களினால்  வழங்கி வைக்கப்பட்டது. இதில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி மற்றும் போரதீவுப்பற்று கலாசார உத்தியோத்தர் ஆ.பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கிராமம் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பல குடும்பங்களையும், தினந்தோறும் கூலித்தொழிலுக்கும், சுயதொழில்களையும் மேற்கொள்ளும் பல குடும்பங்களை  கொண்ட கிராமமாகும். அதுமட்டுமன்றி பல அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலும் இக்கிராம மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

உலக வல்லரசுகளையே ஆட்டம்காண வைத்துள்ள கோரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துக்காக இலங்கை அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதனால் தினக்கூலிக்கு மற்றும் சுயதொழிலுக்கு செல்லும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் அதனை நிவர்த்தி செய்வதற்காக ஒருதொகை உலர்உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.

இக்கிராமத்தில் வாழும் 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளை  போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் அப்பகுதி கிராம சேவையாளர் தி.தியாதீஷ்வரனிடமும் நெற்களஞ்சியசாலை  உரிமையாளர்களான க.சற்குணாணந்தராசா மற்றும் நா.இந்திரநாதன் ஆகியோர் கையளித்தனர். 

அத்துடன் தங்களது நெற்களஞ்சியசாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் உலர்உணவுப்பொதிகளை வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.





SHARE

Author: verified_user

0 Comments: