25 Apr 2020

விவேகானந்தா தொழிநுட்பவியல் கல்லூரியினால் மாவட்ட செயலாளரிடம் உலருணவு பொதிகள் கையளிப்பு.

SHARE
 (திலக்ஸ்)

விவேகானந்தா தொழிநுட்பவியல் கல்லூரியினால் மாவட்ட செயலாளரிடம் உலருணவு பொதிகள் கையளிப்பு.
கோரோனா வைரஸ் தாக்கத்தின் பரவலை கட்டுப்படுத்துவற்காக இலங்கை அரசாங்கம் ஊரடங்ககு சட்டத்தை அமுல்படுத்தி வருகின்றது. இதனால் அன்றாட தினக்கூலிக்கு வேலை செய்யும் மக்கள் நிர்க்கதியான நிலையில் அவர்களின்  வாழ்வாதாரத்தை சீர் செய்யும் முகமாக பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் விவேகானந்த தொழிநுட்ப கல்லூரியினால்  3 ஆம் கட்ட நிவாரணப் பணிக்காக அவுஸ்திரேலிய சிட்னி முருகன் ஆலயத்தினால் 380 குடும்பங்களிற்கும், அத்தோடு ஏனைய தன்னார்வ தொண்டர்களின்  மூலமாக  70 குடும்பங்களிற்கும் மொத்தமாக 450 குடும்பங்களிற்கான உலருணவு பொதிகளை மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கலாமதி பத்மராஜாவிடம் கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் மற்றும் ஏனைய ஊழியர்களினால் கையளிக்கப்பட்டது. 

மாவட்ட செயலாளரின் ஆலோசனைக்கமைவாக மண்முனைப்பற்று, மண்முனை தென்மேற்கு மற்றும் ஏறாவூர்-செங்கலடி பிரதேச செயலாளர்களின் வழிகாட்டுதலுக்கு அமைவாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கிராமங்களிற்கு உலர் உணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டது. 

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் சமூகநல சேவைப் பிரிவின் தொடர்ச்சியான நிவாரணப் பணியில் இதுவரை போரதீவூப் பற்று, மண்முனைப்பற்று, மண்முறை தென்மேற்கு, மண்முனை தென்எருவில் பற்று, ஏறாவூர் பற்று-செங்கலடி போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளிற்கும், பயிற்சிபெறும் பயிலுனர்களில் அவசிய தேவையான குடும்பங்கள், இளைஞர் கழகங்களின் வேண்டுகோள்கள், ஏனைய பங்குதார அமைப்புக்களின் வேண்டுகோளிற்கமைவாக உலர் உணவு வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 450 இற்கு மேற்பட்ட குடும்பங்களிற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: