17 Apr 2020

தொழிலை இழந்துள்ள முச்சக்கர வண்டிய உறுப்பிப்பினர்களுக்கு உலர் உணவு வினியோகம்.

SHARE
தொழிலை இழந்துள்ள முச்சக்கர வண்டிய உறுப்பிப்பினர்களுக்கு உலர் உணவு வினியோகம்.
கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்டுத்தும் நோக்குடன் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தினால் பல்வேறு தொழில முயற்சியாளர்களும், சுயதொழிலாளர்களும், தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இந்நிலையில் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களும், இதற்கு விதிவிலக்கானர்வகள் அல்ல. மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட களுவாஞ்சிகுடி முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் தற்போதைய காலகட்டத்தில் வருமானமும் இழந்துள்ள நிலையில் அவர்களது உணவுத்தேவையின் ஒருபகுதியைப் பூர்தி செய்யும் முகமாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் களுவாஞ்சிகுடி வட்டார உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜின் சொந்த நிதியிலிந்து வெள்ளிக்கிழமை (17) உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

மண்முனைத் தென் எருவில் பற்று பிரதேசம் எங்கும் முற்றாக முடங்கியுள்ள இந்நிலையில் முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் எதுவித வருமானமுமின்றி வீட்டிலே முயங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில் தம்மைத் தேடி வந்து இவ்வுதவியை மேற்கொண்டமைக்கு தமது முச்சக்கர வண்டிச் சங்கத்தின் சார்பில் பிரதேச சபை உறுப்பினர் வினோராஜிக்கு தமது தன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக முச்சக்கர வண்டிய ஓட்டுனர்கள் இதன்போது தெரிவித்தனர்.

162 போர் அங்கத்துவமுள்ள அச்சங்கத்தில் தற்போது 70 பேருக்கு இவ்வுதவிகள் வழங்கி வைக்கப்பட்டதாகவும், ஏனையவர்களுக்கு சனிக்கிழமை வழங்கவுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார்.












SHARE

Author: verified_user

0 Comments: