24 Apr 2020

அரசாங்க உதவித்திட்டத்தில் மட்டக்களப்பில் 182,826 குடும்பங்களுக்கு 914,100,000 ரூபா வழங்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் கருத்து வெளியிட்டார்.

SHARE
அரசாங்க உதவித்திட்டத்தில் மட்டக்களப்பில் 182,826 குடும்பங்களுக்கு 914,100,000 ரூபா வழங்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் கருத்து வெளியிட்டார்.
அரசாங்கத்தின் ஏற்பாட்டில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா உதவித் தொகை வழங்கும் பணிகள் இவ்வாரம் பூர்தி செய்யப்படவுள்ளதாகவும் இத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சத்தி 82ஆயிரத்தி 826 குடும்பங்களுக்கு சுமார் 91 கோடியே 41 இலட்டசம் ரூபா வழங்கப்பட்டிருப்பதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா வெள்ளிக்கிழமை (24) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதன்போது அரசாங்க அதிபர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்… இம்மாவட்டத்தில் வயோதிபர் கொடுப்பனவாக 15ஆயிரத்தி 51 குடும்பங்களுக்கு 7 கோடியே 52 இலட்சத்தில் 55ஆயிரம் ரூபாவும், வலது குறைந்தவர்களுக்குரிய கொடுப்பனவாக 6 ஆயிரத்தி 651 குடும்பங்களுகு;கு 3 கோடியே 32 இலட்சத்தி 55 ஆயிரம் ரூபாவும், சமுர்த்திப் பயனாளிகள் காத்திருப்புப் பட்டியலிலுள்ளவர்கள் 1 இலட்சத்தி 36 ஆயிரத்தி 177 குடும்பங்களுக்கு 68 கோடியே 8 இலட்சத்தி 55ஆயிரம் ரூபாவும் இதுவரையில் நிவாரண உதவியாக வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். 

இதுதவிர இம்மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்த 23 ஆயிரத்தி 422 குடும்பங்களுக்கு 11 கோடியே 71 இலட்சத்தி 10 ஆயிரம் ரூபாவும், சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவாக 248 குடும்பங்களுக்கு 12 இலட்சத்தி 40 ஆயிரம் ரூபாவும், நிவாரணம் கிடைக்கவில்லையென மேன்முறையீடு செய்த 1277 குடும்பங்களுக்கு 63 இலட்சத்தி 85ஆயிரம் ரூபாவும் நிவாரண உதிவயாக வழங்கப்பட்டிருப்பதாகவும் இத்துடன் இம்மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் நலன் விரும்பிகளால் வழங்கப்பட்ட உலர் உணவு நிவாரணப் பொதிகள் 69 ஆயிரத்தி 449 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

இந்த ஊடக சந்திப்பில் அரச அதிபர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திகன் அறிவுறுத்தல்களுக்கமைவாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவு செயல்படுத்தப்படுவதாகவும் அங்கு 47 கொரோனா நோய் இனங்காணப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அதற்கான வசதிகளை செய்து கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: