29 Apr 2020

கட்டுரை : சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 15 ஆண்டுகள்.

SHARE
கட்டுரை : சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 15 ஆண்டுகள். 
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 15 ஆண்டுகள் கடந்துவிட்டன.  28.04.2020 அன்று அவரது நினைவு தினமாகும். பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 28, 2005ஆம் ஆண்டில் பாதுகாப்பு மிகுந்த இலங்கையின் தலைநகர் கொழும்பில் நாடாளுமன்றத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

1959, ஆகஸ்ட் 11, இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் பிறந்த சிவராம் தராகி என்ற பெயரில் த ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையில் 1989இல் தன் முதல் கட்டுரையை எழுதினார். அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த அவரது கட்டுரைகள் உள் நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் பரவலாக வாசிக்கப்பட்டன.

பத்தி எழுத்தாளராக அரசியல் ஆய்வாளராக படைத்துறை ஆய்வாளராக பல்வேறு பரிமாணங்களை கொண்ட சிவராம் பெற்றிருந்தர்.

தமிழ் தேசியம் சார்ந்து ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதிவந்த சிவராம் பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்ப்புக்களையும் கடந்தே எழுதிவந்த அவர் அரசாங்கத்தினாலும், அரசாங்க சார்புக் குழுக்களாலும் எதிரானவராக பார்க்கப்பட்டு கடுமையான நெருக்கதல்களை சந்தித்து, இறுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். சிவராமுக்கு விடுதலைப் புலிகள் மாமனிதர் என்ற   விருதை வழங்கியிருந்தனர்.
 
நிலவும் ஊடக, கருத்துச் சுதந்திர மறுப்பு சூழலை காட்டும் சிவாரமின் படுகொலை நடந்து 15 வருடங்கள் கடந்தபோதும் இதுவரையில் நிமலராஜன் முதல் சிவராம் உட்பட அவரின் பின்பும் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு பொறுப்பான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: