20 Mar 2020

இன்று மாலை ஆறு மணிமுதல் கடைகளை அடைக்கும்மாறும் மக்களை வீடுகளுக்குச் செல்லுமாறும் பொலிசார் ஓலிபெருக்கிகள் மூலம் வேண்டுகோள்.

SHARE
இன்று மாலை ஆறு மணிமுதல் கடைகளை அடைக்கும்மாறும் மக்களை வீடுகளுக்குச் செல்லுமாறும் பொலிசார் ஓலிபெருக்கிகள் மூலம் வேண்டுகோள்.
இலங்கை முழுவதுமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (20) பொலிஸ் மாலை ஆறு மணிமுதல் கடைகளை அடைக்கும்மாறும் மக்களை வீடுகளுக்குச் செல்லுமாறும் ஓலிபெருக்கிகள் மூலமாக வேண்டு கோள்களை விடுத்தனர்.

மக்கள் மூன்று நாள்கள் வீடுகளில் முடங்க வேண்டியதனால் முண்டி அடித்துக்கொண்டு பொருள்களை கொள்வனவுசெய்து வந்தமையினையும் அவதாணிக்க கூடியதாக இருந்தது. சில வர்த்தக நிலையங்கள் பிற்பகல் வேளையில் இருந்து திறக்கப்படாமல் இருந்தது திறந்து இருந்த வர்த்தக நிலையங்களில் சில அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு கானப்பட்டன சில பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கியதாகவும் மக்கள் கவலை தெரிவித்தானர்.

அன்றாடம் கூளித்தொழில்களில் ஈடுபடுகின்றவர்களின் குடும்பங்களின் நிலமைதான் சற்று கடினமாக இக்காலத்தில் கானப்படும் இருந்தும் இத்தகை கொடுமையான ஆள்கொல்ளி வைரசான கொரோனாவை நமது நாட்டில் இருந்து முற்றாக இல்லாது ஒழிப்பதற்கு அரசுடன் அனைத்து மக்களும் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என அரசாங்கம் கேட்டுக்கொள்கின்றது 






SHARE

Author: verified_user

0 Comments: