30 Mar 2020

கட்டாரில் உள்ள தனது மகனை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவும் - தந்தையொருவரின் உருக்கமான வேண்டுகோள்

SHARE
(துசா)


கட்டாரில் உள்ள தனது மகனை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவும் - தந்தையொருவரின் உருக்கமான வேண்டுகோள்.
தொழில் நிமித்தம் கட்டார் நாட்டிற்கு சென்று, அங்கு தொழில் புரிந்துகொண்டிருக்கும் தமது மகனை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை வெளிவிகார அமைச்சு உடன் எடுக்க வேண்டுமென, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவினைச் சேர்ந்த குமாரவேலி லோகராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


உலக நாடுகளில் ஏற்பட்டிருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்று, கட்டார் நாட்டிலும் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் எமது நாட்டினைப்போல் பாதுகாப்பு இல்லையென தான் உணருவதாகவும், இலங்கை நாட்டிலே பாதுகாப்பு அதிகம் உள்ளது. எமது நாட்டினைப் போன்றல்லாது அந்நாட்டிலே தொடர்ந்தும் தனது மகனை வேலைகளில் ஈடுபடுமாறு குறித்த கம்பனி குறிப்பிட்டிருக்கின்றமை கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், தனது மகனை உடனடியாக நாட்டிற்கு கொண்டுவந்து, எம்முடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு உடன் எடுக்கமாறும் உருக்கமாக தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: